ஹாலிவுட் நடிகர் ஜாக்கிசானுக்கு ஆஸ்கார் விருது

201609030728266691_Hollywood-actor-Jackie-Chan-to-the-Oscar-award_SECVPFபிரபல ஹாலிவுட் நடிகர் ஜாக்கிசான். ஹாங்காங்கில் பிறந்த இவருக்கு தற்போது 62 வயது ஆகிறது. தனது 17-வது வயதில் புரூஸ் லீ நடித்த ‘பிஸ்ட் ஆப் பியூரி, என்டர் த டிராகன்’ உள்ளிட்ட படங்களுக்கு சண்டைப்பயிற்சி கலைஞராக பணியாற்றினார்.

1970-ஆம் ஆண்டில் இருந்து கதாநாயகனாக நடித்து வருகிறார். புரூஸ் லீக்கு மாற்றான அதிரடி கதாநாயகனாக இவரை பார்த்தனர். தற்காப்பு கலையான குங்பூ சண்டைகள் இவராலேயே பிரபலம் அடைந்தன.

அதிரடி நாயகனான இவருக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளனர். ஆபத்தான சண்டை காட்சிகளில் நடித்து பல தடவை காயம் அடைந்து இருக்கிறார். இதுவரை 100-க்கும் மேற்பட்ட படங்களில் கதாநாயகனாக நடித்து இருக்கிறார். குழந்தைகளை கவரும் அவரது நகைச்சுவை சண்டைகாட்சிகளும் பிரபலமானவை.

இவர் நடித்த போலீஸ் ஸ்டோரி, ரஷ் ஹவர், ரம்பல் இன் த பிராங், பிராஜக்ட் ஏ, ஹார்ட் ஆப் ரேகன், ஹூ ஆம் ஐ உள்ளிட்ட பல படங்கள் உலகம் முழுவதும் வெளியாகி வசூல் குவித்தன. உலக அளவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகர்களில் இவர் இரண்டாவது இடத்தில் இருக்கிறார். 30-க்கும் மேற்பட்ட படங்களை டைரக்டும் செய்துள்ளார்.

இப்படி பல சாதனைகள் நிகழ்த்திய ஜாக்கிசான் ஒரு தடவை கூட சர்வதேச அளவில் உயரிய விருதான ஆஸ்கார் விருதுக்கு தேர்வாகவில்லை. இது அவரது ரசிகர்களுக்கு பெரிய குறையாகவே இருந்தது.

இந்த குறையை போக்கும் வகையில் ஜாக்கிசானுக்கு தற்போது கவுரவ ஆஸ்கார் விருது அறிவிக்கப்பட்டு உள்ளது. திரைத்துறையில் அவரது வாழ்நாள் சாதனைகளுக்காக இந்த கவுரவ விருது வழங்கப்படுகிறது.

வருகிற நவம்பர் மாதம் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெறும் ஆஸ்கார் விருது வழங்கும் விழாவில் ஜாக்கிசான் இந்த விருதை பெறுகிறார்.

Post your comment

மேலும் சில பரிந்துரைகள்

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries