முருகதாஸ் இயக்கத்தில் நடித்தது பெருமை: சோனாக்‌ஷி சின்ஹா

201609031011399192_proud-act-Murugadoss-movie-Sonakshi-Sinha_SECVPFஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் இந்தியில் பிரமாண்டமாக உருவாகி இன்று திரைக்கு வந்துள்ள படம் ‘அகிரா’. இது ‘மவுன குரு’ படத்தின் ‘ரீமேக்’. நாயகிக்கு முக்கியத்துவம் கொண்ட இதில் சோனாக்‌ஷி சின்ஹா துணிச்சலான பெண்ணாக நடித்திருக்கிறார். இது பற்றி கூறிய அவர்…

“டைரக்டர் ஏ.ஆர்.முருகதாஸ் முதன் முறையாக ஹீரோயினை மையமாக வைத்து எடுத்துள்ள படம் இது. நான் நாயகியாக இதில் நடித்திருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது

‘அகிரா’ படத்துக்காக நான் கடுமையாக உழைத்திருக்கிறேன். இது போன்ற ஒரு படம் கிடைக்காதா என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்த சரியான நேரத்தில் இந்த படத்தில் அகிரா கதாபாத்திரத்தில் நடிக்கும் வாய்ப்பு என்னை தேடி வந்தது.

எனக்குள் இருக்கும் நடிப்புத்திறமையை அறிந்து இந்த படத்தில் நடிக்க வைத்திருக்கிறார். இது சவாலான வேடம். நாட்டில் உச்சத்தில் இருக்கும் ‘ஆக்‌ஷன்’ நாயகர்களை இயக்கியவர் முருகதாஸ். அவரது படத்தில் நடித்திருப்பது பெருமை” என்றார்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries