இயக்குனர்கள் ராஜு முருகன், விக்ரம் குமார் திருமணம்: காதலித்தவர்களையே கரம் பிடித்தனர்

201609051444315233_Director-rajumurugan-vikram-kumar-marriage-yesterday_SECVPFபத்திரிகையாளரான ராஜு முருகன், தினேஷ்-மாளவிகா நடித்த ‘குக்கூ’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானார். இப்படத்தை தொடர்ந்து சமீபத்தில் வெளியான ‘ஜோக்கர்’ படத்தையும் இயக்கியிருந்தார். இப்படத்தின் வெற்றி இவரை தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனர்கள் பட்டியலில் இணைத்தது.

இந்நிலையில், இவரும், தனியார் தொலைக்காட்சிகளில் வர்ணணையாளராக பணியாற்றி வந்த ஹேமா சின்ஹாவும் நீண்ட நாட்களாக நண்பர்களாக பழகி வந்தனர். நாளடைவில் இவர்களது நட்பு காதலாக மாறி, இருவரும் திருமணம் செய்துகொள்ள முடிவு செய்தனர். அதன்படி, நேற்று பெசன்ட் நகர் முருகன் கோவிலில் இருவரும் திருமணம் செய்துகொண்டனர்.

இந்த திருமணத்தில் இயக்குனர் பாலா, பத்திரிகையாசிரியர் கண்ணன், எழுத்தாளர் மனுஷ்ய புத்திரன், கவிஞர் யுகபாரதி என ராஜுமுருகனின் நெருக்கமான நண்பர்கள் மட்டுமே கலந்துகொண்டனர்.

மேலும், சூர்யா நடிப்பில் வெளிவந்த ‘24’ படத்தை இயக்கிய விக்ரம் குமாருக்கும் நேற்று திருமணம் நடைபெற்றது. சவுண்ட் என்ஜினியர் ஸ்ரீதியும் இவரும் நீண்டநாட்களாக காதலித்து வந்த நிலையில், நேற்று இருவரது திருமணம் அவரவர் பெற்றோர் சம்மதத்துடன் நடைபெற்றது.

இந்த திருமணத்தில் நடிகர் சூர்யா, இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான், நடிகை நீது சந்திரா மற்றும் மணமக்களின் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் கலந்துகொண்டனர்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries