புதிய இயக்குனருக்கு வாய்ப்பு கொடுத்த விஷ்ணு விஷால்

201609071330128229_Vishnu-Vishal-introduce-new-director_SECVPFஎழில் இயக்கத்தில் கடைசியாக வெளிவந்த ‘வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன்’ படத்தின் மூலம் விஷ்ணு விஷால் தயாரிப்பாளராக மாறினார். இப்படத்தை தயாரித்ததோடு அதில் நடிக்கவும் செய்திருந்தார். வசூல் ரீதியாக இந்த படம் ஓரளவுக்கு வெற்றியடைந்தது விஷ்ணு விஷாலை தொடர்ந்து படங்களை தயாரிக்க உத்வேகம் கொடுத்துள்ளது.

இந்நிலையில், விஷ்ணுவிஷால் தன்னுடைய தயாரிப்பில் புதிய இயக்குனர் ஒருவருக்கு வாய்ப்பு வழங்கியுள்ளார். முருகானந்தம் என்ற புதிய இயக்குனர் இயக்கும் அந்த படத்தை விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ் என்ற தனது நிறுவனம் தயாரிப்பதோடு விஷ்ணுவிஷாலே நடிக்கவும் செய்கிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கியுள்ளது. இப்படம் குறித்த மேலும் தகவல்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. விஷ்ணு விஷால் தற்போது சுசீந்திரன் இயக்கத்தில் ‘மாவீரன் கிட்டு’ என்ற படத்தில் நடித்து வருகிறார்.

அடுத்தாக உதயநிதியுடன் இணைந்து சுசீந்திரன் இயக்கும் மற்றொரு படத்திலும் நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online