நடிகை கத்ரீனாவை ஏற்றாமல் சென்ற ஏர் இந்தியா விமானம்

201609070841535676_actress-katrina-kaif-sidharth-malhotra-missed-Air-India_SECVPFடெல்லியில் உள்ள இந்திரா காந்தி விமான நிலையத்தில் இருந்து மும்பைக்கு நடிகை கத்ரீனா கைப், நடிகர் சித்தார்த் மல்கோத்ரா ஆகியோர் ஏர் இந்தியா விமானத்தில் செல்ல ஏற்கனவே டிக்கெட் முன்பதிவு செய்திருந்தனர். திட்டமிட்டபடி நேற்று முன்தினம் இரவு அவர்கள் 2 பேரும் டெல்லி விமான நிலையத்துக்கு முன்கூட்டியே வந்தனர்.

இருவரும் விமானத்தில் ஏற அனுமதி பெற்றிருந்த நிலையில் திடீரென அவர்களை ஏராளமான ரசிகர்கள் சூழ்ந்து கொண்டனர். உடனே இருவரும் விரைவில் வெளியாக உள்ள ‘பார் பார் தேக்கோ’ என்ற தங்களின் இந்தி படம் குறித்து ரசிகர்களுடன் ஆர்வமுடன் உரையாடி கொண்டிருந்தனர்.

இரவு 9.40 மணிக்கு செல்ல வேண்டிய விமானத்தில் 10 மணி மேல் ஆகியும் அவர்கள் இருவரும் ஏறவில்லை. விமானம் புறப்பட தாமதமானதால் அதில் இருந்த மற்ற பயணிகள் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து வேறு வழியின்றி இருவரையும் ஏற்றாமல் இரவு 10.45 மணிக்கு ஏர் இந்தியா விமானம் மும்பைக்கு புறப்பட்டு சென்றது.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online