ஹீரோ ஹீரோயின் வில்லன் இல்லாமல் உருவான ஆண்டவன் கட்டளை

201609091924558369_aandavan-kattalai-movie-latest-update_secvpfமணிகண்டன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, ரித்திகா சிங் மற்றும் பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘ஆண்டவன் கட்டளை’. இதற்கு முன் மணிகண்டன் இயக்கத்தில் வெளியான ‘காக்கா முட்டை’, குற்றமே தண்டனை படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது.

இதனால் பாஸ்போர்ட் பிரச்சினைகளை மையமாகக் கொண்டு உருவாகியிருக்கும் ‘ஆண்டவன் கட்டளை’ திரைப்படத்திற்கும் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் ‘ஆண்டவன் கட்டளை’ திரைப்படம் குறித்த சுவாரசிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. படத்தில் விஜய் சேதுபதி, ரித்திகா சிங் என முன்னணி நடிகர், நடிகையர் நடித்திருந்தாலும் இப்படத்தின் கதை ஹீரோ, ஹீரோயின், வில்லன் என யாரை சுற்றியும் நகராதாம்.

‘காக்கா முட்டை’, ‘குற்றமே தண்டனை’ போல கதாபாத்திரங்களை மையமாகக்கொண்டு இப்படத்தின் கதை நகரும் என்று கூறப்படுகிறது.

இப்படத்தில் நான்கு பாடல்கள் இருந்தாலும் கதையுடன் ஒட்டிய பாடல்களாகவே அவை இருக்குமென்றும் ஹீரோ, ஹீரோயினுக்கு என தனியாக பாடல்கள் இருக்காதென்றும் படக்குழு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதனால் வழக்கமான கமர்சியல் படங்கள் போல இல்லாமல் ‘ஆண்டவன் கட்டளை’ வித்தியாசமான படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online