விஜய்யை கோபப்படுத்திய சங்கவி

201609091604212788_sanghavi-angers-vijay_secvpfஅஜித் சினிமாவுக்கு அறிமுகமான ‘அமராவதி’ படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் சங்கவி. விஜய்யுடன் ‘ரசிகன்’, ‘விஷ்ணு’, ‘கோயமுத்தூர் மாப்ளே’ உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார். ரஜினியுடன் ‘பாபா’, கமலுடன் ‘பஞ்சதந்திரம்’ உள்ளிட்ட படங்களில் சிறுசிறு கதாபாத்திரங்களிலும் நடித்துள்ளார். தற்போது சமுத்திரகனி ஜோடியாக ‘கொளஞ்சி’ என்ற படத்தில் ஹீரோயினாக ரீ-என்ட்ரி கொடுத்துள்ளார்.

இந்நிலையில், சமீபத்தில் சங்கவி அளித்த பேட்டி ஒன்றில் விஜய் தன்மேல் கோபப்பட்ட சம்பவம் ஒன்றை பகிரிந்து கொண்டுள்ளார்.

பொதுவாக விஜய் படப்பிடிப்பு தளங்கள் மட்டுமில்லாது பொது விழாக்களிலும் ரொம்பவும் அமைதியானவர் என்பது தெரியும். அப்படிப்பட்டவர் ரொம்பவும் கோபக்காரர் என்று சங்கவி கூறியிருப்பது அனைவருக்கும் ஆச்சர்யத்தை கொடுத்துள்ளது.

இதுகுறித்து அவர் கூறும்போது, விஜய் நடிப்பில் வெளிவந்த ‘விஷ்ணு’ படத்தை இயக்கியவர் அவரது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர். அந்த படத்தில் நடித்தபோது, நானும் விஜய்யும் குளிர்ந்த நீரில் குளிக்கும் காட்சி படமாக்கப்பட்டது.

தண்ணீர் ரொம்பவும் குளிராக இருந்தால் இரண்டு பேருமே அதில் குதிக்க தயங்கினோம். ஆனால், எஸ்.ஏ.சந்திரசேகர் என்னைப் பார்த்து குதி என்று கத்தியதும், பயத்தில் நான் தண்ணீரில் குதித்துவிட்டேன். ஆனால் விஜய் மட்டும் குதிக்கவில்லை.

உடனே எஸ்.ஏ.சி. சார் விஜய்யை பார்த்து அந்த பொண்ணு எப்படி தைரியமாக குதிக்கிறது. நீ ஏன் குதிக்கவில்லை என்று அவரை பலமாக திட்டினார். அப்போது விஜய் என்னை ஆத்திரத்துடன் ஒரு பார்வை பார்த்தார். அந்த பார்வையை என்னால் இதுவரை மறக்கவே முடியாது என்று கூறினார்.

சங்கவி ஹிரோயினாக ரீ-என்ட்ரி ஆகியிருக்கும் ‘கொளஞ்சி’ படத்தில் இரண்டு குழந்தைகளுக்கு தாயாக நடித்துள்ளார். இப்படம் அவருக்கு சிறந்த ரீ-என்ட்ரியாக இருக்கும் என சினிமா வட்டாரங்களில் பரவலாக பேசப்படுகிறது.
முதன்மை செய்திகள்

காவிரி நதி நீர் பிரச்சனையில் பிரதமர் தலையிட்டு தீர்வு காணவேண்டும்: சித்தராமைய்யா கடிதம்
புதுச்சேரி சட்டசபையின் முதல் கூட்டத் தொடர் நிறைவு பெற்றது சென்னை மாநகராட்சி கூட்டம் ஒரு நாள் நீட்டிப்பு
விமானம் மூலம் கோவை வந்தடைந்தார் குடியரசுத்தலைவர் பிரணாப்முகர்ஜி
புதுச்சேரியில் உள்ள அனைத்து அரசு கல்லூரிகளிலும் வை-பை வசதி அமைக்கப்படும்: ஷாஜகான்
தேசிய மருத்துவ நுழைவுத்தேர்வுக்கு எதிரான வழக்கில் சிபிஎஸ்இ, மத்திய, தமிழக அரசு பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு காவிரி பிரச்சனையை நீதிமன்றத்தால் தீர்க்க முடியாது: தேவகவுடா
மேலும் செய்திகள்

சூர்யா ஜோடியாகிறார் கீர்த்தி சுரேஷ்
அரசியலில் இருந்தாலும் தொடர்ந்து நடிப்பேன்: சரத்குமார்
சத்யராஜுக்கு ஜோடியான அமலாபால்
ஜி.வி.பிரகாஷ் புதிய பட தலைப்பு ‘அடங்காதே’
மீண்டும் அட்லியுடன் மெகா பட்ஜெட்டுடன் இணையும் விஜய்
Share

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries