சூர்யா ஜோடியாகிறார் கீர்த்தி சுரேஷ்

201609091519500558_keerthy-suresh-fair-with-suriya_secvpfவிக்ரம் பிரபுவின் ‘இது என்ன மாயம்’ படத்தின் மூலம் கீர்த்தி சுரேஷ் நாயகியாக அறிமுகம் ஆனார். சிவகார்த்திகேயனுடன் நடித்த ‘ரஜினி முருகன்’ வெற்றி பெற்றதையடுத்து விஜய்யின் ‘பைரவா’ படத்தில் நடித்து வருகிறார்.

தெலுங்கு, மலையாளத்திலும் நடிக்கிறார். தனுசுடன் ‘தொடரி’யில் நடித்திருக்கிறார். பாபிசிம்ஹாவுடன் ‘பாம்புசட்டை’ படத்திலும் நடித்துள்ளார். இந்த படங்கள் விரைவில் திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், சூர்யாவுடன் நடிக்க கீர்த்தி சுரேசுக்கு வாய்ப்பு கிடைத்திருக்கிறது. இதை ‘கொம்பன்’ படத்தை இயக்கிய முத்தையா இயக்க இருக்கிறார்.

தற்போது ‘எஸ்-3’ படத்தில் நடித்து வரும் சூர்யா, அடுத்து விக்னேஷ் சிவன் படத்திலும், தொடர்ந்து அருண்குமார் இயக்கும் படத்திலும் நடிக்கிறார். இந்த படங்களை முடித்த பிறகு கீர்த்தி சுரேஸ்- சூர்யா நடிக்கும் படம் தொடங்குகிறது. இதன் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு நடைபெறப் போவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries