மீண்டும் அட்லியுடன் மெகா பட்ஜெட்டுடன் இணையும் விஜய்

201609091154114089_vijay-again-joint-with-atlee-with-mega-budget_secvpfவிஜய்-அட்லி கூட்டணியில் வெளிவந்த ‘தெறி’ படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. வசூல் அளவில் மிகப்பெரிய சாதனைகளை படைத்தது. இந்நிலையில், இந்த கூட்டணி மீண்டும் எப்போது இணையும் என்ற எதிர்பார்ப்பு நிலவி வந்தது. அதன்படி, இருவரும் மீண்டும் இணையப் போவதாக செய்திகளும் வெளிவந்தது. ஆனால், அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படாமலேயே இருந்தது.

இந்நிலையில், ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிப்பில் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகும் ஒரு படத்தில் விஜய் நடிக்கவுள்ளதாகவும், அந்த படத்தை அட்லி இயக்கப்போவதாக அதிகாரப்பூர்வமான செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. ஏற்கெனவே, ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிக்கும் 100-வது படத்தை இயக்கும் சுந்தர்.சி. படத்தில் விஜய்யை நடிக்க வைக்க ஏற்பாடுகள் நடைபெற்றது.

ஆனால், அந்த படத்துக்காக அதிக நாட்கள் கால்ஷிட் ஒதுக்கவேண்டும் என்று கேட்டதால், விஜய் அதிலிருந்து விலகிவிட்டதாக கூறப்பட்டது. தற்போது, அதே தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் மற்றொரு படத்தில் விஜய் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளதாக வந்துள்ள செய்திகள் அனைவருக்கும் ஆச்சர்யத்தை கொடுத்துள்ளது.

விஜய் தற்போது பரதன் இயக்கத்தில் ‘பைரவா’ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை தொடர்ந்து அட்லி இயக்கத்தில் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. மீண்டும் ‘தெறி’ கூட்டணி இணைவது விஜய் ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries