ஆன்லைனில் ரிலீஸ் ஆகும் முதல் தமிழ்படம் கர்மா

201609091043172580_karma-is-the-first-tamil-film-to-be-released-online_secvpfகிரியேட்டிவ் கிரிமினல் சார்பில் ஆர். அரவிந்த் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘கர்மா’. வருகிற 16-ந்தேதி இது ஆன்லைனில் ரிலீஸ் ஆகிறது. ஐ.டி யூன்ஸ், கூகுள் பிளே, அமேசான் வீடியோ உட்பட பல இணைய தளங்களில் இப்படத்தை காண ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

“இனி வரும் காலங்களில் இணையத்தில் திரைப்படங்களை வெளியிடுவது சர்வ சாதாரணமாகலாம். அதற்கு முன்னோடியாக நாங்கள் இருப்பதற்கு பெருமை அடைகிறோம். இது ஆன்லைனில் வெளியாகும் முதல் தமிழ் படம்.

பாலிவுடின் பிரபல இயக்குனரும் மாற்று சினிமாவுக்கான முன்னோடியாக திகழும் அனுராக் காஷ்யப் ‘கர்மா’ திரைப்படத்தை இணையதளங்களில் நேரடியாக காணும் லிங்கை டுவிட்டரில் வெளியிடுகிறார்.

‘கர்மா’ திரைப்படம் சமீபத்தில் நடந்த மேட் ரிட் சர்வதேச பட விழாவில் உலக திரைப்படங்களில் சிறந்த இயக்குனருக்கான விருதுக்கு தகுதி பெற்றது. இது தவிர ஹாலிவுட் ஸ்கை பிலிம் விழாவில் சிறந்த திரைப்படத்திற்கான தகுதி பெற்றது.

இது எக்ஸ்பிரிமெண்டல் வகையை சார்ந்த தனி படமாகும்” என்று தயாரிப்பாளர் தெரிவித்தார்.

கவிஞர் வைரமுத்து இந்த படத்திற்கான டைட்டில் பாடலை எழுதி பாடி இருக்கிறார். எல்.வி. கணேசன் இசையமைத்துள்ளார். ஒளிப்பதிவு வி.பி. சிவானந்தம், படத்தொகுப்பு வினோத் பாலன்.

‘தமிழ் திரைப்பட வரலாற்றில் முதல் முறையாக ஆன்லைனில் வெளியிடப்படும் ‘கர்மா’ திரைப்படத்திற்கு அனைவரும் ஆதவளித்து புதுமுயற்சிகளை ஊக்குவிக்க வேண்டும்’என்று இந்த படத்தை தயாரித்துள்ள கிரியேட்டிவ் கிரிமினல் பட நிறுவனம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries