காவிரி பிரச்சினையில் விளம்பரம் தேடும் ஆள் நான் இல்லை: சிம்பு விளக்கம்

201609121621213479_simbu-what-says-for-cauvery-issues_secvpfகாவிரியில் இருந்து தமிழகத்துக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டதற்கு கர்நாடக விவசாயிகள், கன்னட அமைப்புகள், கன்னட திரை நட்சத்திரங்களும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், நடிகர் சிம்பு காவிரி நீர் குறித்து ஒருசில கருத்துக்களை கூறியதாக சமூக வலைத்தளங்களில் செய்தி வெளிவந்தது.

காவிரி நீரை நாங்கள் பிச்சையாக கேட்கவில்லை. எங்களுக்கு உள்ள உரிமையைத்தான் கேட்கிறோம்’ என்று சிம்பு சொன்னதாகவும், கர்நாடகத்தில் தனது படம் ரிலீஸ் ஆகாது என்று கூறியதாகவும் சமூக வலைத்தளங்களில் செய்திகள் பரவத் தொடங்கின.

இதுகுறித்த அறிந்த சிம்பு, காவிரி விவகாரம் குறித்து தான் எந்த அறிக்கையும் வெளியிடவில்லை என்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:- தற்போது நான் தாய்லாந்து நாட்டில், ‘அச்சம் என்பது மடமையடா’ படத்தின் கடைசி கட்ட படப்பிடிப்பில் இருக்கிறேன்.

காவிரி விவகாரம் தொடர்பாக நான் ஏதோ கூறியதாக வந்த செய்திகள் குறித்து எனது நலவிரும்பிகளும், எனது தந்தையும் என்னிடம் கூறினர்.

இந்தியாவின் பொறுப்புள்ள குடிமகனாக, எனது பங்கும், எனது எல்லைகளும் என்னவென்று எனக்குத் தெரியும். காவிரி விவகாரம் குறித்து எந்த அறிக்கையும் நான் வெளியிடவில்லை. இது இரு மாநிலங்களுக்கும் இடையில் நிலவும் சர்ச்சை. இது கலைஞர்கள் மேடையேறி பிரச்சாரம் செய்வதற்கான விஷயம் அல்ல.

சட்டத்தின் துணையோடு இரு மாநிலத் தலைவர்களும் இதற்கான தீர்வை எட்டுவார்கள். நம்மால் முடிந்தது, நன்றாக பருவமழை இரு மாநிலங்களிலும் அமைதியும் வளமும் செழிக்க வேண்டும் என பிரார்த்திப்பதே. அதேபோல, நாம் அண்டை மாநில மக்களாக சுமூகமாக வாழ்ந்துள்ளோம்.

ஆனால் இந்த விவகாரத்தினால் எக்காரணம் கொண்டும் இரு மாநில மக்களிடையே இருக்கும் உறவில் எந்த பாதிப்பும் ஏற்பட்டுவிடக்கூடாது என விரும்புகிறேன்.

இந்த பிரச்சினையை கூடிய விரைவில் கடப்போம் என நம்புகிறேன். இந்த விவகாரம் தொடர்பாக அரசியல் ரீதியில் அறிக்கைகளை விட்டு, இரு மாநிலங்களிலும் அமைதி இல்லாத நிலையை ஏற்படுத்தி, அதன் மூலம் விளம்பரம் தேடும் ஆள் அல்ல நான் என்பதை மீண்டும் வலியுறுத்துகிறேன்” என்று சிம்பு தெரிவித்துள்ளார்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries