தனுஷின் தொடரி படத்தின் சென்சார் மற்றும் ரிலீஸ் தேதி வெளியானது

201609121554268893_dhanush-thodari-censor-and-release-date-confirmed_secvpfதனுஷ்-கீர்த்தி சுரேஷ் நடிப்பில் பிரபு சாலமன் இயக்கியிருக்கும் புதிய படம் ‘தொடரி’. இப்படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. டி.இமான் இசையமைத்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்புகள் அனைத்தும் முடிவடைந்து இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வந்தது.

இந்நிலையில், இப்படத்திற்கு சான்றிதழ் பெறுவதற்காக தணிக்கை குழுவினருக்கு திரையிட்டு காண்பித்தனர். படத்தை பார்த்த தணிக்கை குழுவினர் படத்திற்கு ‘யு’ சான்றிதழ் அளித்துள்ளனர்.

இது படக்குழுவினரை மிகவும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. தணிக்கை சான்றிதழ் கிடைத்த சந்தோஷத்தில் படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழுவினர் அறிவித்துள்ளனர். அதன்படி, வருகிற செப்டம்பர் 22-ந் தேதி உலகமெங்கும் வெளிவரவிருக்கிறது.

இப்படம் முழுக்க முழுக்க ரெயிலேயே படமாக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் தனுஷ் கேண்டீன் ஊழியராக நடித்து இருக்கிறார். இப்படத்தின் பாடல்களும், டிரைலரும் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், படத்தின் ரிலீஸ் தேதியையும் ரசிகர்களுடன் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries