காவிரி பிரச்சினை: சென்னையில் ரஜினி, பிரபுதேவா வீடுகளுக்கு பாதுகாப்பு

201609131152407739_cauvery-issue-chennai-rajini-prabhu-deva-house-protection_secvpfகாவிரியில் தண்ணீர் திறந்து விட வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டதை தொடர்ந்து கர்நாடக மாநிலத்தில் வன்முறை வெடித்துள்ளது. அங்கு தமிழர்களின் வாகனங்கள் எரிக்கப்படுகின்றன. சொத்துக்கள் சூறையாடப்படுகின்றன.

இதையடுத்து, தமிழ்நாட்டிலும் ஒருசில அசம்பாவிதங்கள் நடந்துள்ளன. கர்நாடகத்தைச் சேர்ந்த பஸ், கார்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டன. கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த நிறுவனங்களும் தாக்குதலுக்குள்ளாகின.

இதையடுத்து தமிழ்நாட்டில் உள்ள கர்நாடக நிறுவனங்கள், பிரபலங்களின் வீடுகளுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. போலீசார் ரோந்து சுற்றி வருகிறார்கள்.

நடிகர்கள் ரஜினி, பிரபு தேவா, பிரகாஷ்ராஜ், அர்ஜுன், ரமேஷ் அரவிந்த் ஆகியோருக்கு சென்னையில் வீடுகள் உள்ளன. இவர்களுடைய வீடுகளுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

பிரபல நடிகர்களுக்கு சென்னை நகரில் வீடுகள் இருந்தாலும் பெரும்பாலானவர்கள், கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள பண்ணை வீடுகளில்தான் தங்கி இருக்கிறார்கள். எனவே, அந்த வீடுகளுக்கும் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இது தவிர கர்நாடகத்தைச் சேர்ந்த நடிகைகள், துணை நடிகர்- நடிகைகள் தங்கி இருக்கும் இடங்களுக்கும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

சென்னையில் நடைபெறும் கர்நாடகத்தைச் சேர்ந்த நடிகர் – நடிகைகள் தொடர்பான படப்பிடிப்புகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries