நடிகர் சங்கத்தில் இருந்து சரத்குமார், ராதாரவி, வாகை சந்திரசேகர் தற்காலிக நீக்கம்

201609131007576710_union-actor-sarath-kumar-radha-ravi-vagai-chandrasekar_secvpfதென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் நேற்று ஒரு அறிக்கை வெளியிடப்பட்டது. அதில் கூறியிருப்பதாவது:-

சென்ற ஆண்டு அக்டோபர் மாதம் நடந்த தேர்தலுக்கு பிறகு நாங்கள் புதிய நிர்வாகமாக பொறுப்பேற்று எங்கள் பணியை செய்து வருகிறோம். சங்கத்தின் நலன்கருதி தொலைநோக்கு பார்வையோடு, சில முக்கிய முடிவுகளையும், சீரமைக்கும் பணிகளையும் செய்ய கடமைப்பட்டுள்ளோம்.

அதன் விளைவாக, நாங்கள் நடத்திய சோதனைகள் மூலம் முந்தைய நிர்வாகம் செய்த முறைகேடுகள், பல ஆவணங்கள் மற்றும் விவரங்கள் மூலமாக தெரியவந்துள்ளது. இதுபற்றி பலமுறை செயற்குழுவில் விவாதித்து பலமுடிவுகள் எடுக்கப்பட்டுள்ளது. மேலும், சென்ற ஆண்டு பொதுக்குழுவில் நடவடிக்கைகள் எடுக்க ஒப்புதல் பெறப்பட்டது.

அதன்படி, சட்டரீதியாக பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. சங்க விதிமுறைகள்படியும், இப்போது நடவடிக்கை எடுத்திருக்கிறோம். அதன்படி, இந்த முறைகேடுகளின் விசாரணை முடிந்து உண்மை தெரியும்வரை முன்னாள் நிர்வாகிகள் சரத்குமார், ராதாரவி, வாகை சந்திரசேகர் ஆகிய 3 பேரையும் தற்காலிகமாக நடிகர் சங்க உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கி இருக்கிறோம்.

இது பழிவாங்கும் நடவடிக்கை அல்ல. ஒரு பொதுசங்கத்திலும், அறக்கட்டளையிலும் முறைகேடுகள் நடந்திருப்பதால், அதை சீர்திருத்தி சங்கத்துக்கு ஏற்பட்ட இழப்பை சரிக்கட்டவேண்டிய நிலையில் நாங்கள் உள்ளோம். முறைகேடுகள் என்பது கணக்கு வழக்கு முறைகேடுகள் மட்டுமல்ல. சங்க சொத்து வாங்கல், விற்றல் கூட ஆகும்.

இதற்காக மேலும் சில முன்னாள் நிர்வாகிகளுக்கும் தன்னிலை விளக்கம் கேட்டு கடிதம் அனுப்பப்பட உள்ளது. இடையில், நாங்கள் அனுப்பிய தன்னிலை விளக்க கடிதத்தின்மேல், சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் சரத்குமார் வழக்கு தொடர்ந்தார்.

அதில் நாங்கள் பதில் மனு தாக்கல் செய்தோம். அவருடைய இடைநிலை மனு தள்ளுபடி செய்யப்பட்டது. எனவே, அவருக்கு சாதகமாக எந்தவொரு தீர்ப்பும் வழங்கப்படவில்லை. மேலும், நிர்வாகம் சங்க சட்டவிதிகளின்படி செயல்படுகிறோம். இது செயற்குழுவின் தற்காலிக முடிவாகும். மேலும் நீதிமன்ற முடிவுக்கு பிறகு தொடர் முடிவுகள் எடுக்கப்படும்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries