வன்முறையில் யாரும் ஈடுபட வேண்டாம்: பிரகாஷ்ராஜ் வேண்டுகோள்

201609141026211817_do-not-get-involved-in-violence-by-anyone-prakash-raj_secvpfகாவிரி பிரச்சினையில் வன்முறைகளில் ஈடுபடுவதை கண்டித்து நடிகர் பிரகாஷ்ராஜ் கூறியதாவது:-

“தமிழகத்திலும் கர்நாடகத்திலும் என்ன நடக்கிறது என்பதை நாம் பார்க்கிறோம். உரிமைக்காக போராடலாம். நீதிக்காக போராடலாம்.

அதற்காக பஸ்களை கொளுத்த கூடாது. சொத்துகளை அழிக்க கூடாது. வருங்கால தலைமுறைக்கு இதையா சொல்லித்தர போகிறீர்கள். கோபத்தை கலவரம் மூலம் வெளிப்படுத்துவது முறையல்ல.

எல்லோரும் நமது சகோதர சகோதரிகள். அனைவரும் மனிதாபிமானத்தோடு செயல்பட வேண்டும். பிரச்சினைகளுக்கு தீர்வு காண தலைவர்கள் இருக்கிறார்கள். அரசாங்கம் இருக்கிறது. நீதிமன்றங்கள் இருக்கிறது. அவர்களின் முடிவுக்கு விட்டு விடுவோம். எனக்கு கோபம் புரிகிறது.

அதை வெளிப்படுத்தும் முறை சரியல்ல. நமது சொத்துகளை நாமே அழிக்க கூடாது. வன்முறையில் யாரும் ஈடுபட வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன். வன்முறைகளையும் வதந்திகள் பரப்புவதையும் நிறுத்துங்கள்.”

இவ்வாறு பிரகாஷ்ராஜ் கூறினார்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online