‘கிடாரி’யை தொடர்ந்து சசிகுமார் நடிக்கும் புதிய படம்

201609151619251690_sasikumar-next-film-launched_secvpfசசிகுமார், நிகிலா விமல் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த ‘கிடாரி’ படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த படத்தைத் தொடர்ந்து சசிகுமார் நடிக்கும் அடுத்தப் படம் குறித்த தகவல்கள் வெளிவந்துள்ளது. அதன்படி, சசிகுமார் நடிக்கும் அடுத்த படத்தை பிரகாஷ் என்ற புதுமுக இயக்குனர் இயக்கவிருக்கிறார்.

இப்படத்தை சசிகுமார் தனது ‘கம்பெனி புரொடக்ஷன்ஸ்’ நிறுவனம் மூலம் தயாரிக்கவிருக்கிறார். இவர் தயாரிக்கும் 9-வது படம் இது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இப்படத்திற்கு ‘கிடாரி’ படத்திற்கு இசையமைத்த தர்புகா சிவா இசையமைக்கவுள்ளார். மேலும், இப்படத்தில் கோவை சரளா, சங்கிலி முருகன் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளனர்.

இப்படத்தின் ஹீரோயின் யார்? என்பது இன்னும் முடிவாகவில்லை. விரைவில் அதுகுறித்து அறிவிப்பார்கள் என தெரிகிறது.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online