அஜித்தின் பாலிசியை பின்பற்ற தகுதி வேண்டும்: ஜெய்க்கு தயாரிப்பாளர் சிவா அறிவுரை

201609151208576430_producer-siva-advice-to-jai-for-ajith-policy_secvpfஅஜித் கடந்த சில வருடங்களாகவே தான் நடிக்கும் படத்தின் எந்த புரோமோஷன் நிகழ்ச்சிகளிலும் கலந்துகொள்வதில்லை என்பதை பாலிசியாகவே கடைபிடித்து வருகிறார். அவரது பாலிசியை தற்போது தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் பல நடிகர், நடிகைகள் கடைபிடித்து வருகின்றனர். அதில் நடிகர் ஜெய்யும் ஒருவர்.

ஜெய், சமீபகாலமாக அவர் நடிக்கும் படங்களின் புரோமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வது கிடையாது. சமீபத்தில் அவர் நடித்துள்ள ‘சென்னை 600 028’ இரண்டாம் பாகத்தின் படக்குழுவினர் சந்திப்பிலும் அவர் கலந்துகொள்ளவில்லை. இதுகுறித்து பேசிய தயாரிப்பாளர் டி.சிவா அவருக்கு அறிவுரை வழங்கும்விதமாக மேடையில் பேசினார்.

அப்போது அவர் பேசும்போது, அஜித் முன்பெல்லாம் அவருடைய படத்தின் புரோமோஷன்களில் கலந்துகொள்ளாதது எனக்கு மிகுந்த வருத்தத்தை கொடுத்தது.

ஆனால், அவர் புரோமோஷன்களில் கலந்துகொள்ளாததற்கு காரணம் எனக்கு விளங்கியதுபோது, அவர் எடுத்ததுதான் சரியான முடிவு என்று எனக்கு பட்டது. அந்த முடிவை அவர் உச்சத்தில் வந்தபிறகுதான் எடுத்தார்.

ஆனால், தற்போது வளர்ந்து வரும் நடிகர்கள் பலரும் அவரது பாலிசியை பின்பற்றுவதாக கூறி, படத்தின் புரோமோஷன்களில் கலந்துகொள்வது கிடையாது.

அஜித்தின் பாலிசியை பின்பற்றுவதற்கு அவர்களுக்கெல்லாம் ஒரு தகுதி வேண்டும். அந்த தகுதியை அவர்கள் வளர்த்துக் கொண்டபிறகு அதை பின்பற்றுவதில் தவறில்லை என்று கூறினார்.

அப்போது, பத்திரிகையாளர்களில் ஒருவர் சிவாவை பார்த்து, நீங்கள் ஜெய்யை மனதில் வைத்துதான் இதை சொல்கிறீர்களா? என்று கேட்ட கேள்விக்கு, சிவா, அவரைத்தான் நான் சொல்கிறேன் என்று வைத்துக்கொள்ளுங்கள்.

ஜெய் எனக்கு தம்பி மாதிரி, அவருக்கு அண்ணனாக இந்த அறிவுரையை சொன்னதாக இருக்கட்டும் என்று பேசி வைத்தார். சிவாவின் இந்த பேச்சு பத்திரிகையாளர் சந்திப்பில் சிறு சலசலப்பை ஏற்படுத்தியது.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online