மிஷ்கின் படத்தில் விஷாலுடன் இணையும் மேலும் ஒரு நடிகர்

201609201536103741_mysskin-thupparivalan-movie-again-joint-famous-actor_secvpfமிஷ்கின் இயக்கத்தில் விஷால் நடிக்கவிருக்கும் படம் ‘துப்பறிவாளன்’. இப்படத்தின் முதற்கட்ட பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று கொண்டிருக்கிறது. இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இயக்குனர் கே.பாக்யராஜ், பிரசன்னா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருந்தனர்.

தற்போது மேலும் ஒரு நடிகர் இப்படத்தில் இணைகிறார். ஜெயம் கொண்டான், ஒன்பதுல குரு உள்ளிட்ட பல படங்களில் நடித்த வினய் தான் தற்போது இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு செப்டம்பர் 23-ந் தேதி தொடங்கவிருக்கின்றனர்.

116e5ac4-d760-42b3-8151-d9324c841f84_l_styvpfஇப்படத்தின் கதாநாயகியாக ராகுல் பிரீத் சிங் நடிக்கிறார். இப்படத்தை விஷால் பிலிம் பேக்டரி நிறுவனம் மூலம் விஷாலே தயாரிக்கிறார். ஆரோல் கரோலி இப்படத்திற்கு இசையமைக்கிறார். ஒன்றுக்கும் மேற்பட்ட நடிகர்கள் ‘துப்பறிவாளன்’ படத்தில் இணைந்துள்ளது படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகமாக்கியுள்ளது.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries