குட்டையாக இருப்பதாக கூறி 18 வயதில் மாடலிங் செய்யவிடாமல் தடுத்தனர்: சன்னி லியோன்

201609201303593635_modeling-prevented-in-18-age-for-short-sunny-leone_secvpfஇந்தி பட உலகில் முக்கிய இடம் பிடித்திருப்பவர் சன்னிலியோன். சமீபத்தில் நியூயார்க் நகரில் நடந்த ‘பே‌ஷன் ஷோ’ வில் கவர்ச்சியாக ஒய்யார நடை நடந்து வந்தார். இவருக்கு சிறுவயதில் இருந்தே மாடலிங் செய்ய ஆசையாம். ஆனால் குட்டையாக இருப்பதாக கூறி அவரை மாடலிங் செய்யவிடாமல் தடுத்தார்களாம்.

இதுகுறித்து அவர் கூறும்போது, “சிறு வயதில் இருந்தே மாடல் அழகி ஆக வேண்டும் என்பதுதான் எனது ஆசை. 18 வயதில் ‘மாடலிங்’ செய்ய முயன்றேன். ஆனால், ‘நீ குட்டையாக, குண்டாக இருக்கிறாய்’ என்று கூறி அதில் கலந்து கொள்ள விடாமல் தடுத்து விட்டார்கள்.

‘மாடலிங்’ செய்ய தகுதியானவள் இல்லை என்று அன்று நிராகரிக்கப்பட்ட அந்த சன்னிதான் இன்று இந்த பே‌ஷன் வாரவிழாவில் ஓய்யார நடை நடந்து வந்திருக்கிறேன்.

இந்த நிகழ்ச்சியில் அனைவரிடமும் வரவேற்பை பெற்றிருக்கிறேன். பே‌ஷன் ஷோவில் நடந்து வரும் போது கால் தடுமாறி விழுந்து விடுவேனோ என்று பயந்தேன். இப்போது என்னுடைய நீண்டகால கனவு நனவாகி இருக்கிறது.

இதை என்னால் நம்பவே முடியவில்லை. ஆசிட் வீசியதால் பாதிக்கப்பட்ட ரேஷ்மா குரேஷியும் இதில் பங்கேற்றார். அவரை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அவரது துணிச்சலை நினைத்து பெருமைப்படுகிறேன்” என்றார்.

Post your comment

மேலும் சில பரிந்துரைகள்

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries