தமிழகம் முழுவதும் 400 திரையரங்குகளில் வெளியாகும் ஆண்டவன் கட்டளை

201609211128228583_aandavan-kattalai-release-400-theaters-in-all-over-tamilnadu_secvpfவிஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியிருக்கும் புதிய படம் ‘ஆண்டவன் கட்டளை’. இப்படத்தை ‘காக்கா முட்டை’ படத்தை இயக்கிய மணிகண்டன் இயக்கியுள்ளார். ‘இறுதிச்சுற்று’ நாயகி ரித்திகா சிங் இப்படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார். வருகிற 23-ந் தேதி இப்படம் உலகமெங்கும் வெளியாகவுள்ளது.

இப்படத்தை ஸ்ரீகிரீன் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் எம்.எஸ்.சரவணன் தமிழகமெங்கும் வெளியிடுகிறார். கிட்டத்தட்ட 400 திரையரங்குகளில் இப்படம் திரையிடப்படுகிறது. ஸ்ரீகிரீன் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றாக திகழ்ந்து வருகிறது.

‘புலி’, ‘இந்தியா பாகிஸ்தான்’, ‘சண்டிவீரன்’, ‘ஜாக்சன் துரை’ ஆகிய வெற்றிப்படங்களை வெளியிட்ட இந்நிறுவனம் அடுத்ததாக விஜய் நடிப்பில் உருவாகி வரும் ‘பைரவா’ படத்தின் வெளியீட்டு உரிமையையும் வாங்கியுள்ளது.

அதுமட்டுமில்லாமல், ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் உருவாகி வரும் ‘அடங்காதே’ படத்தையும் தயாரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries