சூர்யா-விக்னேஷ் சிவன்-அனிருத் மூன்று பேரும் இப்போ தானா சேர்ந்த கூட்டம்

201609221156241097_suriya-vignesh-shivan-anirudh-joint-film-title-thaanaa_secvpf‘நானும் ரவுடிதான்’ படத்திற்கு பிறகு விக்னேஷ் சிவன், பலராலும் பேசப்படும் இயக்குனர்களில் ஒருவராகிவிட்டார். இப்படத்தை தொடர்ந்து அவர் யார்? படத்தை இயக்குவார் என்று பலருடைய எதிர்பார்ப்பாக இருந்து வந்தது. இந்நிலையில், விக்னேஷ் சிவன் தனது அடுத்த படத்தை சூர்யாவை வைத்து இயக்கப்போவதாக அதிகாரப்பூர்வமாக தகவல் வெளிவந்தது.

இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கப் போகிறார் என்பதும் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது. ஆனால், நாயகி யார் என்பது மட்டும் முடிவாகாமலேயே இருந்து வருகிறது. நயன்தாராதான் மீண்டும் விக்னேஷ் சிவன் படத்தில் நடிக்கப்போவதாக சில செய்திகள் வெளியானாலும், இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படாமலேயே இருந்து வருகிறது.

இந்நிலையில், இப்படத்திற்கு தற்போது தலைப்பை வெளியிட்டுள்ளனர். ‘தானா சேர்ந்த கூட்டம்’ என்பதுதான் அந்த படத்தின் தலைப்பு. இது ‘பாட்ஷா’ படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி பேசும் வசனம். அந்த வசனத்தையே தற்போது படத்தின் தலைப்பாக மாற்றியுள்ளன். இப்படத்தை ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரிக்கிறது.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online