உடல் எடையை பராமரிக்கும் கதாநாயகிகள்

201609230900010568_heroines-caring-to-weight-gain_secvpfபழைய கதாநாயகிகள் தங்களின் வயது, உடல் எடை போன்ற விவரங்களை வெளிப்படுத்தாமல் ரகசியம் காத்தனர். வயதான பிறகும் மேக்கப் மூலம் இளமை தோற்றத்தில் வலம் வந்தார்கள். வயது, உடல் எடை பற்றிய உண்மை விவரங்கள் வெளிப்பட்டால் ரசிகர்களும் டைரக்டர்களும் ஒதுக்கி விடுவார்கள், மார்க்கெட் இழந்து விடுவோம் என்ற அச்சம் அவர்களிடம் இருந்தது.

ஆனால் இப்போது கதாநாயகிகளால் இதுபோன்ற விஷயங்களை மறைக்க முடியவில்லை. அவர்களின் வயது சம்பந்தமான பிறப்பு சான்றிதழ்களே வெளி வந்து விடுகின்றன. நடிகைகளின் ஜாதகங்களும் இணையதளங்களில் பரவி கிடக்கிறது. அப்படி வெளிச்சத்துக்கு வந்துள்ள இன்றைய கதாநாயகிகளின் உடல் எடை விவரம் வருமாறு:-

அனுஷ்கா, தென் இந்திய நடிகைகளில் உயரமானவர் என்ற தகுதியுடன் இருக்கிறார். இஞ்சி இடுப்பழகி படத்துக்காக தனது உடல் எடையை 80 கிலோ வரை கூட்டினார். ஆனாலும் எடையை சராசரியாக 62 கிலோவுக்கு கூடாமல் பார்த்துக்கொள்கிறார்.

நடிகைகள் காஜல் அகர்வால், சுருதிஹாசன், தமன்னா ஆகியோரின் உடல் எடை 55 கிலோ. இதில் இருந்து எடை கூடவோ குறையவோ செய்யாமல் ஒரே சீராக வைத்துக்கொள்கின்றனர். இந்த எடையை பராமரிப்பதற்காக உணவு கட்டுப்பாடு மற்றும் உடற்பயிற்சிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள்.

நடிகைகள் ஸ்ரேயா, டாப்சி ஆகிய இருவரும் தங்கள் உடல் எடையை 52 கிலோவாக இருக்கும்படி பார்த்துக்கொள்கின்றனர்.

திரிஷாவின் உடல் எடை 55 கிலோவாக இருக்கிறது. சினிமாவில் அறிமுகமானதில் இருந்து இன்று வரை 15 வருடங்களுக்கும் மேலாக அவரது உடல் எடை ஒரே அளவில் இருப்பது சக நடிகைகளை ஆச்சரியப்படுத்தி இருக்கிறது. திரிஷாவும் யோகா பயிற்சியில் தவறாமல் ஈடுபடுகிறார்.

சமந்தாவின் உடல் எடை 51 கிலோவாகவும், நித்யா மேனன் உடல் எடை 58 கிலோவாகவும் இருக்கிறது.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online