தென் ஆப்பிரிக்காவில் விஜய் சேதுபதி படப்பிடிப்பு

201609241437559982_vijay-sethupathi-dev-shooting-in-south-africa_secvpfவிஜய் சேதுபதி நடிப்பில் வெளியான ‘தர்மதுரை’ ரசிகர்களின் ஆதரவை பெற்றது. இதையடுத்து, விஜய் சேதுபதி நடிப்பில் ‘ஆண்டவன் கட்டளை’ திரைக்கு வந்திருக்கிறது. இதில் விஜய் சேதுபதியுடன் இணைந்து ரித்திகா சிங் நடித்திருக்கிறார்.

பாஸ்போர்ட் பிரச்சினைகளை மையமாகக் கொண்டு உருவாகியிருக்கும் ‘ஆண்டவன் கட்டளை’ திரைப்படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.குறிப்பாக விஜய் சேதுபதி-ரித்திகா சிங் நடிப்பு, வசனங்கள், யோகி பாபு காமெடி நன்றாக இருப்பதாக ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.

அடுத்து ‘றெக்க’ ‘மெல்லிசை’ ‘இடம் பொருள் ஏவல்’ ஆகிய படங்கள் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியாக இருக்கின்றன. இந்நிலையில் கே.வி.ஆனந்த் இயக்கத்தில் தயாராகும் ‘தேவ்’ படத்தின் பாடல் காட்சிக்காக விஜய்சேதுபதி தற்போது தென் ஆப்பிரிக்காவுக்கு சென்றுள்ளார்.

விஜய் சேதுபதி-மடோனா செபாஸ்டின் இடையேயான பாடல் காட்சிகளை தென் ஆப்பிரிக்காவில் படம்பிடிக்க கே.வி.ஆனந்த் திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries