பிரகாஷ்ராஜின் ‘சில சமயங்களில்’ கோல்டன் குளோப் இறுதி சுற்றுக்கு தேர்வு

201609241242545926_prakashrajs-sila-samayangalil-enters-final-round-golden_secvpfடைரக்டர் பிரியதர்‌ஷன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் ‘சில சமயங்களில்.’ இதில் பிரகாஷ்ராஜுடன் இணைந்து நாசர், ஸ்ரேயாரெட்டி, அசோக் செல்வன், வருண், சண்முக ராஜன் உள்பட பலர் நடித்துள்ளனர்.

பிரபுதேவா ஸ்டுடியோஸ், திங்பிக் ஸ்டூடியோ சார்பில் கே.கணேஷ், ஏ.எல்.அழகப்பன் ஆகியோர் தயாரித்துள்ள இப்படத்துக்கு இளையராஜா இசை அமைத்துள்ளார்.‘சில சமயங்களில்’ படம் 74-வது கோல்டன் குளோப் விருதின் இறுதிச்சுற்றுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசிய பிரகாஷ் ராஜ் “ஞானமும்,திறமையும் கொண்ட சிறந்த படைப்பாளி,இயக்குனர் பிரியதர்‌ஷன். அனைத்து விருதுகளையும் பெறும் தகுதி, திறமை அவருக்கு இருக்கிறது. உலக சினிமாவின் பார்வை தற்போது தமிழ் சினிமாவின் பக்கம் திரும்பியுள்ளது. அதற்கு காரணம் பிரியதர்‌ஷன்” என படத்தின் இயக்குனர் பிரியதர்ஷனை மனமாரப் பாராட்டினார்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries