கவர்ச்சி உடை அணிந்து வந்த கங்கனா ரணாவத்தை முற்றுகையிட்ட ரசிகர்கள்

201609270832376761_kangana-ranaut-besieged-by-fans-were-sexy-dress_secvpfநடிகைகள் பலர் பொது நிகழ்ச்சிகள் மற்றும் பட விழாக்களுக்கு கவர்ச்சி உடை அணிந்து வருவதை வழக்கமாக வைத்து இருக்கிறார்கள். இதனால் சர்ச்சைகளுக்கு ஆளாகிறார்கள்.

நடிகை ஸ்ரேயா சில வருடங்களுக்கு முன்பு சென்னையில் நடந்த பட விழாவில் அரைகுறை உடை அணிந்து கலந்து கொண்டதால் விமர்சனத்துக்கு ஆளானார். அவர் மீது நடவடிக்கை எடுக்கும்படி போலீசிலும் புகார் அளிக்கப்பட்டது.

இதுபோல் பல நடிகைகள் கவர்ச்சி உடைகளில் விழாக்களுக்கு வந்து ரசிகர்கள் கூட்டத்தில் சிக்கி போலீசாரால் மீட்கப்பட்ட சம்பவங்கள் நடந்துள்ளன.

நடிகை கங்கனா ரணாவத்தும் தற்போது கவர்ச்சி உடையில் வந்து ரசிகர்களிடம் சிக்கி தப்பித்தால் போதும் என்று ஓடிய சம்பவம் மும்பையில் நடந்துள்ளது. கங்கனா ரணாவத் ‘தாம்தூம்’ படத்தில் ஜெயம் ரவி ஜோடியாக நடித்து தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர்.

இந்தியில் வெளியான ‘குயின்’ படத்தில் நடித்து சிறந்த நடிகைக்கான தேசிய விருதையும் பெற்றார். இந்தி பட உலகில் அதிக சம்பளம் வாங்கும் நடிகையும் இவர்தான்.

ஒரு படத்துக்கு ரூ.12 கோடி வாங்குவதாக கூறப்படுகிறது. இந்தி நடிகர் ஹிருத்திக் ரோஷனை காதலித்து அவருடன் சுற்றி விட்டு தகராறு ஏற்பட்டதால் பிரிந்து இருக்கிறார். 2 பேரும் ஒருவருக்கொருவர் குற்றச்சாட்டுகள் சொல்லி வக்கீல் நோட்டீசும் அனுப்பி இருக்கிறார்கள்.

மும்பையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள கங்கனா ரணாவத் முதுகில் துணி இல்லாமல் திறந்த மேனியுடன் கவர்ச்சியாக வந்து இருந்தார். விழாவில் இருந்த பலரும் அவரது ஆடையை பார்த்து முகம் சுளித்தார்கள்.

ரசிகர்களும் அவரை முற்றுகையிட்டு கேலி-கிண்டல் செய்தார்கள். நிலைமை மோசமாவதை அறிந்த கங்கனா, அந்த இடத்தை விட்டு நகர்ந்து அவசரமாக காரில் ஏறி பறந்து விட்டார்.

இதுகுறித்து நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஒருவர் கூறும்போது, “நடிகைகள் சினிமா மார்க்கெட்டை தக்க வைக்க கவர்ச்சி உடைகள் அணிவது சகஜம். ஆனால் பொது நிகழ்ச்சிகளுக்கு வரும்போது கவர்ச்சிக்கு அவசியம் இல்லை.

சிலர் ஆடை அணிவது எங்கள் சுதந்திரம் என்கிறார்கள். அப்படிப்பட்டவர்களுக்கு கங்கனாவைப்போல் மோசமான அனுபவங்கள் ஏற்படுவதை தவிர்க்க முடியாது” என்றார்.

Post your comment

மேலும் சில பரிந்துரைகள்

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries