மீண்டும் ரஜினி பட தலைப்பை கைப்பற்றிய கிருஷ்ணா

201609271001066540_actor-krishna-again-capture-rajini-movie-title_secvpfசமீபகாலமாக ரஜினி படத்தின் தலைப்பை வைத்து கோலிவுட்டில் புதிய சினிமாக்கள் உருவாகி வருகின்றன. அப்படி, ரஜினி படத்தலைப்பை வைத்து உருவாகும் சினிமாக்கள் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பையும் பெற்று வருகின்றன.

இதனால், தற்போது தமிழ் சினிமாவில் ரஜினியின் பழைய படங்களின் தலைப்பை வைப்பது டிரெண்டாகி வருகிறது. இந்நிலையில், தற்போது கிருஷ்ணா நடிக்கும் புதிய படத்திற்கு ரஜினி படத் தலைப்பான ‘வீரா’ என்று பெயர் வைத்துள்ளனர்.

ரஜினி நடிப்பில் ‘வீரா’ படம் கடந்த 1994-ஆம் ஆண்டு வெளிவந்தது. மீனா, ரோஜா ஆகியோர் ரஜினிக்கு ஜோடியாக நடித்திருந்தனர். சுரேஷ் கிருஷ்ணா இயக்கியிருந்தார். தற்போது கிருஷ்ணா நடிக்கும் ‘வீரா’ படத்தை ராஜாராம் இயக்கவிருக்கிறார்.

கிருஷ்ணாவுடன் கருணா மற்றும் ஐஸ்வர்யா மேனன் ஆகியோர் முன்னணி கதாப்பாத்திரங்களிலும், தம்பி ராமையா, ராதாரவி, மொட்டை ராஜேந்திரன், யோகி பாபு மற்றும் சரண்தீப் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களிலும் நடிக்க உள்ளனர். லியோன் ஜேம்ஸ் இசையமைக்கவிருக்கிறார்.

இப்படத்தை ஆர்.எஸ்.இன்போடைன்மெண்ட் நிறுவனம் சார்பில் எல்ரெட் குமார் தயாரிக்கிறார். ஏற்கெனவே, கிருஷ்ணா நடிப்பில் கடந்த 2012-ஆம் ஆண்டு வெளிவந்த ‘கழுகு’ படம், 1981-ல் முத்துராமன் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வெளிவந்த படத்தின் தலைப்பு என்பது குறிப்பிடத்தக்கது.

Post your comment

மேலும் சில பரிந்துரைகள்

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online