மீண்டும் நடிக்க வந்ததில் மகிழ்ச்சி: பிரபுதேவா

201609290926459152_prabhu-deva-said-glad-to-act-again_secvpfதமிழ் பட உலகில் 1990-களில் முன்னணி கதாநாயகனாக இருந்தவர் பிரபுதேவா. அதன்பிறகு டைரக்டராக மாறி தமிழ், தெலுங்கு இந்தியில் படங்கள் இயக்கினார். நீண்ட இடைவெளிக்கு பிறகு தற்போது ‘தேவி’ படத்தில் மீண்டும் கதாநாயகனாக நடித்துள்ளார்.

இதில் நாயகியாக தமன்னா வருகிறார். விஜய் டைரக்டு செய்துள்ளார். பிரபுதேவாவும் ஐசரி கணேசும் இணைந்து தயாரித்துள்ளனர். இந்த படம் குறித்து பிரபுதேவா சென்னையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

“நான் தமிழ் படங்களில் நடித்து 11 ஆண்டுகள் ஆகிவிட்டது. இப்போது ‘தேவி’ படம் மூலம் மீண்டும் நடிக்க வந்து இருக்கிறேன். ரசிகர்கள் முன்பு போலவே வரவேற்பும் ஆதரவும் அளிக்கிறார்கள். இது மகிழ்ச்சி அளிக்கிறது. இனிமேல் நல்ல கதையம்சம் உள்ள படங்களில் தொடர்ந்து நடிப்பேன்.

சில வருடங்களுக்கு முன்பு மும்பையில் ஒரு நடிகை கொலை செய்யப்பட்டார். அந்த உண்மை சம்பவத்தை மையமாக வைத்து தேவி படம் தயாராகி உள்ளது.

இதில் தமன்னா கிராமத்து பெண்ணாகவும் நகரத்து பெண்ணாகவும் இரண்டு தோற்றங்களில் வருகிறார். சோனுசூட்டும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். படத்தில் 4 பாடல்கள் உள்ளன. ஒரு பாடல் காட்சியில் ரசிகர்கள் எதிர்பார்க்கும் எனது நடனம் இருக்கும். கோவை பின்னணியில் இந்த கதையை உருவாக்கி உள்ளோம். திகில் படமாக தயாராகி உள்ளது. பேய் போன்ற அமானுஷ்ய விஷயங்களையும் படத்தில் பார்க்கலாம். ஆனால் முழு பேய் படமாக இருக்காது. பயமுறுத்துவது போன்ற காட்சிகளும் இல்லை.

விறுவிறுப்பான திரைக்கதையில் ரசிகர்களுக்கு பிடித்தமான படமாக விஜய் இயக்கி உள்ளார்.

இவ்வாறு பிரபுதேவா கூறினார்.

நடிகை தமன்னா கூறும்போது “தேவி படத்தில் நடிப்பு திறமையை வெளிப்படுத்த நிறைய வாய்ப்புகள் இருந்தன. எனக்கு முக்கிய படமாக இது இருக்கும். நான் அதிக சம்பளம் வாங்குவதாக வதந்திகள் பரப்பப்படுகிறது. எனக்கு தகுதியான சம்பளத்தை தயாரிப்பாளர்கள் தருகிறார்கள்” என்றார்.

Post your comment

மேலும் சில பரிந்துரைகள்

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries