ஹவுல் – திரை விமர்சனம்

howl_ver2நாயகன் எட் ஸ்பெல்லீர்ஸ் மெட்ரோ ரெயிலில் டிக்கெட் பரிசோதகராக பணிபுரிந்து வருகிறார். ஒருநாள் அவர் பணியில் இருந்த ரெயில் வனப்பகுதியில் செல்லும்போது, ஒரு மான் ரெயிலில் அடிபட்டு இறக்கிறது. இதனால், ரெயில் நடுக்காட்டில் நிறுத்தப்படுகிறது. என்ஜினுக்குள் மாட்டிக் கொண்ட மானை வெளியே எடுப்பதற்காக டிரைவர் கீழே இறங்குகிறார்.

அப்போது மனித உருவில் ஓநாய் போன்ற ஒரு உருவம் அவரை தாக்கி கொன்று தின்றுவிடுகிறது. ஆனால், இது ரெயில் பயணிகள் யாருக்கும் தெரிவதில்லை. அவர் காணாமல் போய்விட்டதாக அனைவரும் எண்ணுகின்றனர். இந்நிலையில், டிக்கெட் பரிசோதகரான நாயகனிடம் பயணிகள் அனைவரும் தங்களை வெளியே செல்ல அனுமதிக்குமாறு முறையிட, அவரோ அதற்கு மறுக்கிறார்.

இந்நிலையில், அந்த மனித உருவில் இருக்கும் மிருகங்கள் அந்த ரெயிலை தாக்கி உள்ளே உள்ள அனைவரையும் கொன்று தின்ன முயற்சிக்கின்றன. அந்த மிருகங்களிடம் இருந்து பயணிகள் தப்பினார்களா? இல்லையா? என்பதுதான் படத்தின் மீதிக்கதை.

இப்படத்தின் முக்கால் வாசி கதை ரெயிலிலேயே பயணமாகிறது. ஆரம்பத்தில் காதல், ரொமான்ஸ், பயணிகளின் உரையாடல் என கதை மெதுவாக நகர்கிறது. பிறகு, அந்த மனித உருவில் இருக்கும் ஓநாய்களின் அட்டகாசம் தொடங்கியதும் ரெயிலைப் போல கதையும் வேகமாக பயணிக்கிறது.

ஓநாய்களின் அட்டகாசம் தொடங்கியதும் அடுத்தடுத்து நகரும் ஒவ்வொரு காட்சிகளும் நமக்கு பயத்தையும் திகிலையும் ஏற்படுத்துகின்றன.

அதேபோல், அந்த ஓநாய்களிடமிருந்து தப்பிக்க நினைக்கும் ஒவ்வொருவரின் பரிதவிப்பும் நம்முடன் ஒட்டிக் கொள்கின்றன. படம் முழுக்க இருட்டிலேயே நகர்வதால், படத்தில் உள்ள கதாபாத்திரங்களை தெளிவாக காணமுடியவில்லை.

பின்னணி இசை படத்திற்கு பெரிய பலமாக இருந்திருக்கிறது. படத்தில் நடித்துள்ள அனைத்து கதாபாத்திரங்களும் தங்களுக்குண்டான நடிப்பை சிறப்பாக வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.

ஓநாய்களை எதிர்த்து போராடுவது, அவைகளிடம் மாட்டிவிடுவேமா என்று பதைபதைத்துக் கொண்டு இருப்பது என அனைவருமே சிறப்பாக செய்திருக்கிறார்கள்.

மொத்தத்தில் ‘ஹவுல்’ திகில் அனுபவம்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online