எனக்கு மிகவும் பிடித்த நடிகர் விஜய் சேதுபதி: சினேகா

201609301719017416_sneha-saya-vijay-sethupathi-my-favorite-actor_secvpfகமல், விஜய், அஜீத், சூர்யா, விக்ரம் உள்ளிட்ட முன்னணி நாயகர்களுடன் நடித்தவர் சினேகா. இவர் பிரசன்னாவை திருமணம் செய்த பிறகு குடும்ப வாழ்க்கையில் ஒன்றிப் போனார். மகன் விஹானுக்கு ஒரு வயது ஆகிவிட்டது. எனவே மீண்டும் படங்களில் நடிப்பதில் தீவிரம் காட்டி வருகிறார்.

மோகன்ராஜா இயக்கும் சிவகார்த்திகேயன் படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்க சினேகா ஒப்பந்தம் ஆகி இருக்கிறார். தொலைக்காட்சி நடன நிகழ்ச்சி ஒன்றிலும் நடுவராக இருக்கிறார்.

அவரிடம் இப்போது உள்ள நடிகர்களில் உங்களுக்கு பிடித்தமான நடிகர் யார் என்று கேட்டபோது, “விஜய்சேதுபதியை பிடிக்கும். அவருடைய கதாபாத்திர தேர்வு, வசன உச்சரிப்பு அனைத்திலும் ஹீரோயிலும் இல்லை. இயல்பாக இருக்கிறது.

இது எனக்கு பிடித்திருக்கிறது. இதை நான் அவரிடமே நேரில் சொல்லி இருக்கிறேன்” என்றார்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries