பிறந்தநாளில் குருவிடம் ஆசி பெற்ற பாண்டியராஜன்

201610021701218886_pandiyaraja-birthday-celebrate-with-guru_secvpfஇயக்குனரும் நடிகருமான பாண்டியராஜனுக்கு இன்று பிறந்தநாள். அவர் தனது பிறந்தநாளையொட்டி காலை எம்.ஜி.ஆர். சிலைக்கு சென்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர், சினிமாவில் தனது குருவான இயக்குனர் பாக்யராஜை நேரில் சந்தித்து ஆசி பெற்றார்.

பாக்யராஜ், பாண்டியராஜனுக்கு ஆளுயர மாலை அணிவித்து அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை கூறினார். பின்னர், பாக்யராஜுடன் கேக் வெட்டி தன் பிறந்தநாளை வெகுவிமரிசையாக கொண்டாடினார்.

பாண்டியராஜன் தற்போது ‘மாப்பிள்ளை விநாயகர்’, ‘அதாகப்பட்டது மகாஜனங்களே’ உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online