3 நாட்களில் தமிழகத்தில் ரூ.7 கோடி வசூலித்து சாதனை படைத்த எம்.எஸ்.தோனி

201610031425368315_ms-dhoni-breaking-opening-collections-record_secvpfகிரிக்கெட் வீரர் எம்.எஸ்.தோனியின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து ‘எம்.எஸ்.தோனி’ என்ற பெயரில் புதிய படம் உருவாகி கடந்த வாரம் வெள்ளிக்கிழமை வெளிவந்தது. விமர்சன ரீதியாக இப்படத்திற்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது. இந்நிலையில், இப்படம் முதல் 3 நாட்களில் தமிழகத்தில் ரூ.7 கோடி வசூலித்து சாதனை படைத்துள்ளது.

பாலிவுட்டில் உருவான ஒரு படம் தமிழ்நாட்டில் இவ்வளவு தொகை வசூலானது இதுவே முதல் முறை. அதுமட்டுமில்லாமல், டப் செய்யப்பட்டு தமிழில் வெளியாகும் ஒரு படம் இவ்வளவு தொகை வசூலித்தது இந்த படம் மட்டும்தான். இந்த இரண்டு சாதனைகளையும் எம்.எஸ்.தோனி படம் தற்போது படைத்துள்ளது.

எம்.எஸ்.தோனி படத்தை நீரஜ் பாண்டே இயக்கியுள்ளார். சுஷாந்த் சிங் ராஜ்புட் தோனி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். கியாரா அத்வானி, பூமிகா உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online