டி.வி. தொடர்களால் தவறு நடப்பதாக கூறமுடியாது: நடிகை சாதனா

201610030834078084_tv-serials-can-not-happen-wrong-actress-tamil-actress_secvpfதமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய 4 மொழிகளில் 100-க்கும் மேற்பட்ட படங்களில் கதாநாயகியாகவும், குணசித்திர வேடங்களிலும் நடித்து புகழ் பெற்றவர் நடிகை சாதனா.

இவரது கலை சேவையை பாராட்டி ஈரோடு கவிதாலயா இசைப்பயிற்சி பள்ளி சார்பில் நேற்று வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது. முன்னதாக நடிகை சாதனா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது “தமிழ் மற்றும் மலையாளத்தில் டி.வி. தொடரில் மட்டும் நடித்து வருகிறேன். தமிழ் சினிமாவில் நல்ல கதாபாத்திரம் கிடைத்தால் நடிப்பேன். மொழிமாற்றம் செய்து டி.வி. தொடர்கள் ஒளிபரப்பப்படுவதால் தமிழ் நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் பெரிதும் பாதிக்கப்படுகிறார்கள்.

எனவே மற்ற மொழி டி.வி. தொடர்களை தமிழில் மொழிமாற்றம் செய்யக்கூடாது. டி.வி. தொடர்களால் இன்று அதிக அளவில் தவறுகள் நடப்பதாக கூறுகிறார்கள்.

அது முற்றிலும் தவறானது. சினிமாவிலும் சரி, டி.வி. தொடரிலும் சரி நல்லதை மட்டும் எடுத்துக்கொண்டு கெட்டதை மறந்துவிடவேண்டும். அரசியல் பற்றி எனக்கு ஒன்றும் தெரியாது. அதற்கு தனித்திறமை வேண்டும். அது எனக்கு கிடையாது.” என்றார்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online