தனுஷுக்காக அரசியல்வாதியான எஸ்.ஏ.சந்திரசேகர்

201610051350324216_sa-chandrasekar-became-politician-for-dhanush_secvpfதனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள புதிய படம் ‘கொடி’. துரை.செந்தில்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் தனுஷ் அண்ணன் – தம்பி என இரண்டு கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். சந்தோஷ் நாராயணன் இசையில் அமைந்துள்ள இப்படத்தின் பாடல்கள் இன்று வெளியாகியுள்ளது. இந்நிலையில், ‘கொடி’ படக்குழுவினர் இன்று பத்திரிகையாளர்களை சந்தித்து படம் குறித்த தகவல்களை பரிமாறிக் கொண்டனர்.

அப்போது தனுஷ் பேசும்போது, ‘கொடி’ படத்தின் மூலம் முதன்முதலாக இரட்டை வேடத்தில் நடிப்பது எனக்கு மிகப்பெரிய சவாலாக இருந்தது. இதன்மூலம், இதுவரை இரட்டை வேடங்களில் நடித்த நடிகர்கள் மீது எனக்கு மிகுந்த மரியாதை ஏற்பட்டுள்ளது. ஏனென்றால், இரட்டை வேடத்தில் நடிப்பது என்பது அவ்வளவு சிரமமான வேலை என்று பேசினார்.

பின்னர், எஸ்.ஏ.சந்திரசேகர் பேசும்போது, ‘கொடி’ படத்தில் நானும் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன். முதலில், இந்த படத்தில் நடிப்பதற்காக என்னை அணுகியபோது, என்னுடைய சொந்த தயாரிப்பில் மட்டுமே நடிக்க விருப்பம் உள்ளதாக கூறி, நடிக்க மறுத்துவிட்டேன். பின்பு, என் மனைவியிடம் சென்று தனுஷ் படத்தில் நடிக்க கூப்பிட்டார்கள், நான் மறுத்துவிட்டேன் என்று கூறினேன்.

இதைக்கேட்டதும், என் மனைவி, தனுஷின் தீவிர ரசிகை நான். அவருடைய படத்தில் ஏன் நடிக்கமாட்டேன் என்று சொன்னீர்கள் என்று கூறி, மறுபடியும் தனுஷிடம் பேச்சுவார்த்தை நடத்தி இந்த படத்தில் நடிக்க வைத்தார். என்னுடைய கதாபாத்திரம் இந்த படத்தில் பெரிய அளவில் பேசப்படும் என்று நினைக்கிறேன்.

இவ்வாறு அவர் பேசினார்.

இப்படத்தில் எஸ்.ஏ.சந்திரசேகர் அரசியல்வாதி கதாபாத்திரத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது. அரசியல்வாதியாக வரும் தனுஷுக்கு அவர் வில்லனாக நடிப்பதாகவும் கூறப்படுகிறது. இப்படத்தில் திரிஷா, அனுபமா பரமேஸ்வரன் என இரு கதாநாயகிகள் நடித்துள்ளனர். வெற்றிமாறன் இப்படத்தை தயாரித்துள்ளார்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online