ராட்சஷன் போன்ற தோற்றத்தில் ராணா – வைரலாகும் புகைப்படம்

201610051250517131_rana-gim-workout-photo-viral-in-social-networks_secvpfகடந்த வருடம் வெளிவந்த ‘பாகுபலி’ படத்தில் வில்லனாக நடித்தவர் ராணா டகுபதி. இப்படத்தின் இரண்டாம் பாகம் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. முந்தைய பாகத்தின் தொடர்ச்சியாக உருவாகும் படம் என்பதால், முந்தைய பாகத்தில் நடித்த நடிகர்கள் அனைவருமே இந்த படத்திலும் நடித்து வருகிறார்.

சமீபத்தில் இப்படத்தின் இறுதிக்காட்சியில் நடைபெறும் போர்க்காட்சிகளை படக்குழுவினர் படமாக்கி வந்தனர். இந்நிலையில், தற்போது இப்படத்திற்காக ராட்சஷன் போன்று தனது உடல் எடையை அதிரடியாக ஏற்றியுள்ளார் ராணா டகுபதி. இப்படத்தின் கிளைமாக்ஸ் காட்சிக்கு உடல் எடை அதிகரிக்கவேண்டும் என்பதற்காக ராணா இந்த முயற்சியை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

ராணா ஜிம்மில் ஏற்றிய தனது உடல் எடையை காட்டுவதுபோன்ற புகைப்படம் நேற்று முதல் வைரலாக இணையதளங்களில் பரவி வருகிறது. ‘பாகுபலி’ இரண்டாம் பாகம் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் 28-ம் தேதி திரைக்கு வரும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த படத்தை பார்க்க இந்தியாவில் உள்ள அனைத்து ரசிகர்களும், ஏன் திரை பிரபலங்களும் கூட காத்திருக்கிறார்கள்.

Post your comment

மேலும் சில பரிந்துரைகள்

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries