பழம்பெரும் சூப்பர் ஸ்டாரின் பேத்தி சசிகுமாருக்கு ஜோடியானார்

201610051051159213_yesteryear-super-star-grand-daughter-pair-to-sasikumar_secvpf60-70-களில் கோலிவுட்டின் சூப்பர் ஸ்டாராக திகழ்ந்தவர் நடிகர் ரவிச்சந்திரன். இவருடைய மகன் ஹம்சவர்தன் தமிழ் சினிமாவில் ஒரு சில படங்களில் ஹீரோவாக நடித்தார். ஆனால், எதிர்பார்த்த அளவுக்கு பெரிய ஹீரோவாக அவரால் வலம்வர முடியவில்லை.

இந்நிலையில், ரவிச்சந்திரன் மகள் வழி பேத்தி தன்யா, தற்போது சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமாகியிருக்கிறார். இவர் தற்போது தமிழ் சினிமாவில் இரண்டு படங்களில் நடித்து வருகிறார். ராதாமோகன் இயக்கத்தில் உருவாகும் ‘பிருந்தாவனம்’ படத்தில் அருள்நிதிக்கு ஜோடியாக நடித்து வருகிறார். அதுமட்டுமில்லாமல், மிஷ்கின் இயக்கத்தில் உருவாகும் ‘துப்பறிவாளன்’ படத்திலும் நடித்து வருகிறார்.

இந்நிலையில், சசிகுமார் நடிப்பில் உருவாகும் புதிய படத்திலும் தன்யா நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இப்படத்தை பிரகாஷ் என்பவர் இயக்குகிறார். இப்படத்தில் கோவை சரளா, சங்கிலி முருகன் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

இப்படத்தை சசிகுமார் தனது கம்பெனி புரொடக்ஷன்ஸ் நிறுவனம் மூலம் தயாரிக்கிறார். படத்திற்கு ‘அலப்பறை’ என்று பெயர் வைத்துள்ளதாக கூறப்படுகிறது.

Post your comment

மேலும் சில பரிந்துரைகள்

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries