பிரபுதேவா – தமன்னா திடீர் நெருக்கம்?

201610071003051020_prabhu-deva-tamanna-sudden-close_secvpf-1தமன்னா தமிழ், தெலுங்கில் முன்னணி கதாநாயகியாக இருக்கிறார். பிரபுதேவா தமிழ் மற்றும் இந்தி படங்களை டைரக்டு செய்து வந்தார்.

இருவரும் தமிழ், இந்தியில் தயாரான ‘தேவி’ படத்தில் ஜோடியாக நடித்தனர். இதில் பிரபுதேவாவின் நடனம் தன்னை மிகவும் கவர்ந்ததாக தமன்னா பேசி வந்தார். தமன்னாவும் திறமையாக நடனம் ஆடுகிறார் என்று பிரபுதேவா புகழ்ந்தார்.

இந்த படத்தை விளம்பரப்படுத்தும் நிகழ்ச்சிகளில் இருவரும் ஜோடியாக கலந்துகொண்டார்கள்.

தமன்னா இதற்கு முன்பு தான் நடித்த படங்களை விளம்பரப்படுத்தும் நிகழ்ச்சிகளுக்கு வருவது இல்லை என்ற குற்றச்சாட்டுக்கு ஆளானவர். இதற்காக அவர் மீது சினிமா சங்கங்களில் புகார்களும் அளிக்கப்பட்டு உள்ளன. ஆனால் தேவி பட நிகழ்ச்சிகளில் மட்டும் தவறாமல் கலந்து கொண்டார்.

பிரபுதேவாவுக்கும் தமன்னாவுக்கும் படப்பிடிப்பின்போது நெருக்கம் ஏற்பட்டு இருப்பதாகவும் அதனால்தான் இருவரும் பட விழாக்களில் ஜோடியாக சுற்றுகிறார்கள் என்றும் பட உலகினர் மத்தியில் பேசப்பட்டு வருகிறது. இருவரும் காதலிக்கிறார்கள் என்று தெலுங்கு டைரக்டர் ஒருவர் உறுதிப்படுத்தி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

பிரபுதேவா ஏற்கனவே நயன்தாராவை காதலித்து தோல்வி அடைந்தவர். இருவரும் திருமணம் வரை நெருங்கினார்கள். இதற்காக நயன்தாரா மதம் மாறவும் செய்தார். ஆனால் கடைசி நேரத்தில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவரும் பிரிந்து விட்டார்கள். பிரபுதேவாவும் முதல் மனைவியை விவாகரத்து செய்தார்.

பிரபுதேவாவுக்கு தற்போது 43 வயது ஆகிறது. இரண்டாவது திருமணம் செய்து கொள்ளும்படி குடும்பத்தினரும் நண்பர்களும் அவரை வற்புறுத்தி வருகிறார்கள்.

தமன்னாவையும் இதுவரை எந்த நடிகருடனும் இணைத்து கிசுகிசுக்கள் வரவில்லை. பிரபுதேவாவிடம் அவர் மனதை பறிகொடுத்து இருப்பதாக கூறப்படுகிறது. இவர்களின் ரகசிய காதல் விவகாரம் விரைவில் வெளிச்சத்துக்கு வரும் என்று பேசப்படுகிறது.

Post your comment

மேலும் சில பரிந்துரைகள்

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries