ஜேம்ஸ்பாண்டிற்கு இசையமைத்த யுவன்ஷங்கர் ராஜா: வைரலாகும் வீடியோ

201610082033343305_yuvanshankar-raja-composes-for-james-bond_secvpfயுவன் சங்கர் ராஜா இசையமைப்பில் ‘ஜேம்ஸ்பாண்ட்’ பட புகழ் நடிகர் பியர்ஸ் பிராஸ்னன் நடித்த ‘பான் பஹார்’ என்னும் விளம்பரம் சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.

அறுபது வினாடிகள் ஓடக்கூடிய இந்த விளம்பர படத்தின் பின்ணணி இசைக்காக உபயோகப்படுத்தி இருக்கும் ‘வயோலா’ ரக இசைக் கருவி மற்றும் ‘கியூபா’ நாட்டின் பிரசித்தி பெற்ற ‘மாம்போ’ தாளங்களை வைத்து ஜேம்ஸ்பாண்ட் படத்தின் இசையை யுவன்ஷங்கர் ராஜா சற்று மாற்றி கொடுத்திருக்கிறார். இந்திய ரசிகர்கள் மட்டுமின்றி ஹாலிவுட் ரசிகர்களையும் இந்த விளம்பரம் கவர்ந்துள்ளது.

பிரபல ஹாலிவுட் நடிகர் பியர்ஸ் பிராஸ்னனிற்காக யுவன் இசையமைத்திருக்கும் செய்தி, தற்போது இந்திய திரையுலகினரின் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. ஏற்கனவே, ஹாலிவுட் படமொன்றிற்கு யுவன் இசையமைத்து வருவது குறிப்பிடத்தக்கது.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries