தனுஷ் உன்னை பார்த்து பெருமைப்படுகிறேன்: செல்வராகவன்

201610081309079901_director-selvaraghavan-praised-dhanush_secvpfநடிகர், தயாரிப்பாளர், பாடல் ஆசிரியர், பாடகர் என்று பல்வேறு துறைகளிலும் முத்திரை பதித்த தனுஷ் தற்போது ‘பவர் பாண்டி’ படத்தின் மூலம் இயக்குனராகவும் மாறியுள்ளார்.

‘பவர் பாண்டி’ படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு முடிந்து விட்டது. இரண்டாவது கட்ட படப்பிடிப்பு வேகமாக நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் தனுஷின் இயக்கத்தை அவரது அண்ணன் செல்வராகவன் பாராட்டி இருக்கிறார்.

தனுஷ் இயக்கம் குறித்து செல்வராகவன் கூறுகையில் , “பவர் பாண்டி படத்தின் ‘ரஷ்’ காட்சிகளை பார்த்தேன். பிரமித்து போனேன். மிகவும் ஜாலியாக உணர்ச்சிகரமாக, மேஜிக்கலாக இருந்தது. தனுஷ் உன்னை பார்த்து பெருமைப்படுகிறேன்.

ராஜ்கிரண்சார் நீங்க சிம்ப்ளி சூப்பர்” என்று தெரிவித்து இருக்கிறார்.செல்வராகவன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் ‘நெஞ்சம் மறப்பதில்லை’ திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online