அர்ஜுன் மகள் நடிக்கும் புதிய படத்தில் ஹாலிவுட் நடன இயக்குனர்கள்

201610091701459355_hollywood-dance-masters-in-ajun-daughter-act-movie_secvpfநடிகர், இயக்குனர், தயாரிப்பாளர் என பன்முகம் கொண்ட அர்ஜுன் தனது மகள் ஐஸ்வர்யா அர்ஜுன் கதாநாயகியாக நடிக்கும் ‘காதலின் பொன் வீதியில்’ படத்தை ஸ்ரீ ராம் பிலிம் இண்டர்நே‌ஷனல் சார்பாக கதை திரைக்கதை வசனம் எழுதி பிரம்மாண்டமாக தயாரித்து இயக்குகிறார்.

இளமை துடுக்கான வேடத்தில் ஜஸ்வர்யா அர்ஜுன் நடிக்கிறார். நடிப்பு கலையை முறையே பயின்ற சந்தன் தமிழில் கதாநாயகனாக அறிமுகமாகிறார். இவர்களுடன் இயக்குனர் கே.விஸ்வநாத், சுஹாசினி, ‘மொட்டை’ ராஜேந்திரன், மனோபாலா, சதிஷ், யோகி பாபு, ப்ளாக் பாண்டி, போண்டா மணி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.

இப்படத்தின் புது வரவாக ஹாலிவுட்டிலும் பாலிவுட்டிலும் கலக்கிய இளம் இரட்டையர் நடன இயக்குனர்கள் பூணம் ஷா, பிரியங்கா ஷா, ஐஸ்வர்யா அர்ஜுனின் இளமை ததும்பும் ஒரு பாடலுக்கு நடனம் அமைத்துள்ளனர். மகள் ஐஸ்வர்யா விருப்பப்படி அர்ஜுன் இதற்கு ஒப்புதல் அளித்துள்ளார்.

மும்பையில் பெரும் பொருட்செலவில் உருவாக்கப்பட்ட இந்த பாடலுக்கு அவர்கள் இருவரும் நடனம் அமைத்துக் கொடுத்தனர். ஜஸ்வர்யா அர்ஜுன் மிகவும் சிறந்த முறையில் நடனமாடியதாகவும், அனைத்து நடன அசைவுகளையும் மிகவும் எளிதாக கற்றுக்கொண்டார் என்றும் பூனம் ஷா, பிரியங்கா ஷா ஆகியோர் தெரிவித்தனர்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries