எம்.எஸ். தோனி: ஒரு சொல்லப்படாத கதை திரைப்படம் ரூ.100 கோடி வசூலித்தது

201610091402572784_ms-dhoni-the-untold-story-crosses-rs-100-cr-at-bo_secvpfசர்வதேச அளவில் பிரபலமான இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனியின் வாழ்க்கையை மையமாக வைத்து ‘எம்.எஸ். தோனி: ஒரு சொல்லப்படாத கதை’ (M S Dhoni: The Untold Story) என்ற பெயரில் ஒரு திரைப்படம் கடந்த 30-ம் தேதி வெளியானது.

நிரஜ் பாண்டே இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படத்தில் தோனியின் கதாபாத்திரத்தில் சுஷந்த் சிங் ராஜ்புத் என்பவரும் தோனியின் மனைவி சாக்‌ஷியின் கதாபாத்திரத்தில் கியாரா அத்வானியும் நடித்துள்ளனர்.

நாடு முழுவதும் பல்வேறு மொழிகளில் ‘டப்’ செய்யப்பட்ட இந்தப் படம் நாடு முழுவதும் சுமார் 4500 திரையரங்கங்களில் வெளியாகி வெற்றிகரமாக ஓடுகிறது. இந்நிலையில், கடந்த ஒன்பது நாட்களில் இந்தப் படம் 100 கோடி ரூபாயை வசூலித்துள்ளதாக படத்தின் இணை தயாரிப்பு நிறுவனமான ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோ இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries