தனது பணியாளர்களுக்கு கூடுதல் மகிழ்ச்சி கொடுத்த அஜித்

201610111626204009_ajith-home-workers-very-happy-this-time_secvpfஅஜித் ஏழை, எளியவர்களுக்கு உதவும் குணம் கொண்டவர் என்பது அனைவருக்கும் தெரிந்ததே. அவருடைய மனிதநேயத்தை போற்றும் அளவுக்கு பல்வேறு நிகழ்வுகள் நடந்துள்ளது. இன்னும் அவரது மனிதநேயத்தை தூக்கி நிறுத்தும் அளவுக்கு நிகழ்வு ஒன்று அரங்கேறியுள்ளது.

அஜித் தன்னுடைய வீட்டில் பணிபுரியும் அனைவருக்கும் பாரபட்சம் பார்க்காமல் சொந்தமாக வீடு கட்டிக் கொடுத்துள்ளார். அஜித்தின் வீட்டிற்கும் அவரது பணியாளர்கள் குடியிருக்கும் வீட்டிற்கும் கிட்டத்தட்ட 10 கிமீ தூரம் என்பதால் தினமும் அவர்களை அழைத்து வரவும், திரும்ப கொண்டுபோய் விடவும் வேன் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாம்.

இந்நிலையில், சமீபத்தில் அஜித் வீட்டிலிருந்த சமயம் அவரது பணியாளர்கள் வரும் வேன் ஒரு சில நிமிடங்கள் காலதாமதமாக வந்துள்ளது. பணியாளர்கள் தங்களது தாமதத்திற்காக அஜித்திடம் மன்னிப்பு கேட்டுள்ளனர். அப்போது தாமதத்திற்கான காரணத்தை அஜித் கேட்டபோது, முந்தைய நாள் இரவு முழுவதும் தாங்கள் தங்கியிருந்த குடியிருப்பில் மின்சாரம் இல்லாததால், சரியாக தூங்கவில்லை. அதனால்தான் காலதாமதமாக வர நேர்ந்தது என்று பணியாளர்கள் கூறியுள்ளனர்.

இதைக் கேட்டு அறிந்த அஜித், உடனடியாக சம்பந்தப்பட்டவர்களை அழைத்து, பணியாளர்களின் வீடுகள் அனைத்திலும் இன்வெர்ட்டர் பொருத்த உத்தரவிட்டுள்ளாராம். அதிலும் தன் வீட்டில் எந்தமாதிரியான இன்வெர்ட்டரை பயன்படுத்துகிறேனோ, அதே தரத்துக்கு அவர்கள் வீட்டிலும் பொருத்தமாறும் சொல்லியுள்ளாராம். இதனால் பணியாளர்கள் அனைவரும் கூடுதல் மகிழ்ச்சியில் இருக்கிறார்களாம்.

Post your comment

மேலும் சில பரிந்துரைகள்

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries