ராணுவ வீரர்களுடனான ஒற்றுமையை வெளிப்படுத்த வேண்டிய தருணம் இது: அமிதாப் பச்சன் கருத்து

201610111732357906_its-time-to-express-solidarity-with-our-jawans-amitabh_secvpfபாலிவுட் சூப்பர் ஸ்டாரான அமிதாப் பச்சன் தனது 74-வது பிறந்த தினத்தை இன்று மும்பையில் கொண்டாடினார். பிறந்தநாளான இன்று செய்தியாளர் சந்திப்பில் அவர் பேசும் போது, எல்லை தாக்குதல் சம்பவம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர் அளித்த பதிலின் விவரம் வருமாறு:-

நாடு மிகுந்த கோபத்தில் உள்ளது. நாட்டு மக்கள் எல்லையில் நடைபெற்று வரும் சம்பவங்களால் சீற்றமுற்றுள்ளனர். ராணுவ வீரர்களுடனான ஒற்றுமையை வெளிப்படுத்த வேண்டிய தருணம் இது.

அதேபோல், எல்லையில் தங்களுடைய உயிரை தியாகம் செய்துள்ள வீரர்களின் பக்கம் நிற்க வேண்டும். அதனால் தான் நீங்களும் நானும் தற்போது பாதுகாப்பாக உள்ளோம்.

பாகிஸ்தானில் இருந்து வரும் கலைஞர்களை தடை செய்ய வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது குறித்து கேட்கிறீர்கள். இதற்கு முன்பே நான் பதில் அளித்திருக்கிறேன். எல்லா கலைஞர்களுக்கும் நாம் மதிப்பளிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசியுள்ளார்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online