ஆக்‌ஷன் நாயகி ஆகிறார் டாப்ஸி

201610121346092231_taapsee-change-over-to-action-heroine_secvpf‘ஆடுகளம்’ படத்தில் அறிமுகமானவர் டாப்ஸி. அடுத்து ‘வந்தான் வென்றான்’, ‘காஞ்சனா 2’ படங்களில் நடித்தார். சமீபத்தில் இவர் அமிதாப்பச்சனுடன் நடித்த ‘பிங்க்’ படம் வெற்றி பெற்றது. இதையடுத்து தற்போது ‘‌ஷபானா’ என்ற இந்தி படத்தில் நடிக்கிறார். இது முன்பு வெளியாகி வெற்றி பெற்ற ‘பேபி’ படத்தின் இரண்டாம் பாகம்.

அக்‌ஷய்குமார் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் இந்த படத்தில் மனோஜ் பாஜ்பாய், பிரித்விராஜ் உள்பட பலர் நடிக்கிறார்கள்.இந்த படத்தில் டாப்ஸி ஆக்‌ஷன் ஹீரோயினாக நடிக்கிறார்.

இதற்காக அவர் இஸ்ரேல் நாட்டு தற்காப்பு கலையான கிரவ்மஹா, ஜப்பானிய தற்காப்பு கலை அய்கிடோ ஆகியவற்றை கற்று வருகிறார். இந்த தற்காப்பு கலைகளை சொல்லிக் கொடுப்பதற்காக தனி பயிற்சியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்களிடம் மிகவும் தீவிரமாக இந்த கலைகளை டாப்ஸி கற்று வருகிறார். விரைவில் படப்பிடிப்பு தொடங்குகிறது.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online