ரெமோ படத்தின் மற்றொரு கிளைமாக்ஸை வெளியிட்ட சிவகார்த்திகேயன்

remo-647_101216035518சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்த வாரம் வெளிவந்த ‘ரெமோ’ படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இப்படத்தின் வெற்றியை கொண்டாடும் விதமாக நேற்று படக்குழுவினர் பத்திரிகையாளர்களை சந்தித்தனர்.

அப்போது சிவகார்த்திகேயன் பேசும்போது, ‘மான்கராத்தே’ படத்தில் யோகி பாபு நடித்த வௌவால் என்ற கதாபாத்திரம் பரவலாக பேசப்பட்டது. நான் வெளிநாடு சென்றபோதுகூட நிறைய பேர் அந்த கதாபாத்திரத்தை பற்றிக் கேட்டார்கள்.

‘ரெமோ’ படத்தில் யோகி பாபுவுக்காக இரண்டு கிளைமாக்ஸ் எடுத்தார்கள். ஒரு கிளைமாக்ஸ் தற்போது நீங்கள் திரையில் பார்த்துக் கொண்டிருப்பது. இன்னொரு கிளைமாக்சில் நான் புடவை கடையில் புடவை எடுக்க போயிருப்பேன். அப்போது, யோகி பாபு அங்கே வந்து நம்முடைய கல்யாண புடவையை எப்போது எடுக்கிறது என்று கேட்பார்.

அப்போது நான் டென்ஷனாகி இவனை எப்படியாவது காலி பண்ணனும்னு நினைச்சி, ரொம்ப நாளா நான் உங்ககிட்ட ஒண்ணு காட்டணும்னு ஆசைப்படறேன்னு சொல்வேன். அதற்கு யோகிபாபு நானும் அதை ரொம்ப நாளா பார்க்கணும்னு ஆசைப்படுறேன்னு சொல்வார்.

உடனே ரெண்டு பேரும் டிரையல் ரூமுக்குள் சென்று விடுவோம். அப்போது உள்ளிருந்து ‘ஆ’ என்ற சத்தம் மட்டும் வெளியே கேட்கும். அதன்பிறகு நான் வெளியே வந்துவிடுவேன்.

பிறகு அவர் கண்ணீர் மல்க வெளியே வருவார். அப்போது புடவை கடையில் வேலை பார்ப்பவர் யோகி பாபுவிடம் வந்து, சார் ஏதாவது பார்க்கிறீங்களா? என்று கேட்பார். பார்த்துட்டேன்டா என்று யோகி பாபு சொல்வார். அதற்கு மறுபடியும் புடவைக் கடைக்காரர் வெரைட்டியா ஏதாவது பார்க்கிறீங்களா? என்று கேட்பார். இதுல என்னடா வெரைட்டி என்று சொல்லி முடிப்பார்.

இதுதான் இன்னொரு கிளைமாக்ஸாக இருந்தது. ஆனால், இது படத்தில் இடம்பெறவில்லை. படம் தொடர்ச்சியாக இருக்கவேண்டும் என்பதற்காக இதை தூக்கிவிட்டு தற்போது இருக்கும் கிளைமாக்ஸை வைத்துவிட்டோம்.

இதுவரைக்கும் நான் நடிச்ச படங்களில் ரெண்டு கிளைமாக்ஸ் கிடையவே கிடையாது. இந்த படத்தில்தான் இரண்டு கிளைமாக்ஸ் படமாக்கினோம் என்று கலகலப்பாக பேசினார்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries