பெண்களுக்கு தாய்மை என்பது கடவுள் கொடுத்த வரம்: கரீனா கபூர்

201610120951161979_god-gift-to-women-is-motherhood-kareena-kapoor_secvpfஇந்தி படவுலகில் முன்னணி கதாநாயகியாக இருக்கும் கரீனா கபூர் மும்பையில் அளித்த பேட்டி வருமாறு:-

“நான் அடுத்த மாதம் தாயாகப் போகிறேன். பெண்களுக்கு தாய்மை என்பது கடவுள் கொடுத்த வரம். பிறக்கப்போகும் குழந்தைக்கு நானும் கணவர் சயீப் அலிகானும் இப்போதே பெயரை தேர்வு செய்து வைத்து இருக்கிறோம்.

ஆஸ்பத்திரியில் டாக்டர் என்னை பரிசோதித்து நீங்கள் கர்ப்பமாக இருக்கிறீர்கள் என்று சொன்ன போது நான் அடைந்த சந்தோஷத்துக்கு அளவே இல்லை.

முதல் முறை தாயாகப்போவதை நினைத்து வானத்தில் பறப்பதுபோல் இருந்தது. என்னை சுற்றி இருப்பவர்கள் கர்ப்பமாக இருக்கும் கால கட்டத்தில் எதை சாப்பிடவேண்டும் எதை சாப்பிடக்கூடாது என்று தினமும் ஆலோசனைகள் சொல்லிய வண்ணம் இருக்கிறார்கள்.

இதுவரை 500 பேர் கர்ப்பிணிக்கான உணவு வகைகள் பற்றி வெவ்வேறு பட்டியல் கொடுத்து இருக்கிறார்கள்.

அவர்கள் சொன்னவற்றில் எதை சாப்பிடுவது எதை சாப்பிடக்கூடாது என்று முடிவு செய்வதில் எனக்கே பெரிய குழப்பம் ஏற்பட்டது. இதனால் யார் சொல்வதையும் கேட்காமல் எனது குடும்பத்தினர் சொல்லும் உணவுகளையே சாப்பிடுகிறேன்.

சயீப் அலிகானை திருமணம் செய்த போதும் இப்படித்தான் குழப்பினார்கள். சினிமாவில் உச்சத்தில் இருக்கிறாய். இப்போது எதற்கு திருமணம். திருமணம் செய்தால் படவாய்ப்புகள் போய்விடும் என்று பயமுறுத்தினார்கள்.

அவர்கள் சொன்னதை கேட்கவில்லை. திருமணத்துக்கு பிறகு எனது மார்க்கெட் சரியவில்லை. கடவுள் தயவால் நிறைய வாய்ப்புகள் வந்து கொண்டுதான் இருக்கின்றன. கர்ப்பமான போதும் இப்போதைக்கு குழந்தை எதற்கு ‘இமேஜ்’ போய்விடும்.

படங்கள் குறைந்து விடும் என்றார்கள். அதையும் நான் கேட்கவில்லை. பிரசவத்துக்கு பிறகு சில மாதங்கள் ஓய்வு எடுத்து விட்டு மீண்டும் நடிப்பேன்.

சிலர் பெரிய குடும்பத்துக்கு மருமகளாக இருக்கிறாய். குழந்தையை நன்றாக வளர்க்க வேண்டும் என்று இப்போது பயமுறுத்திக்கொண்டு இருக்கிறார்கள். நானும் சயீப் அலிகானும் சாதாரண வாழ்க்கை வாழ வேண்டும் என்றுதான் ஆசைப்படுகிறோம். அதனால்தான் பாதுகாவலர்கள் வைத்துக்கொள்ளவில்லை.

எனது குழந்தைக்கும் பாதுகாவலர்கள் வைத்துக்கொள்ளாமல் சாதாரண குழந்தையைப்போலவே வளர்ப்பது என்று முடிவு செய்து இருக்கிறோம்”

இவ்வாறு கரீனா கபூர் கூறினார்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online