ஆஸ்திரேலியாவில் வலம் வரும் ராதிகா-குஷ்பு-ஊர்வசி-சுஹாசினி

201610131147298805_radhika-kushboo-urvashi-suhasini-in-australia_secvpfஇசை அமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் இயக்கும் 2-வது படம் ஆஸ்திரேலியாவில் உருவாகிறது. இதில் ராதிகா,குஷ்பு, ஊர்வசி, சுஹாசினி நடிக்கிறார்கள்.

இது ஆஸ்திரேலியாவில் வாழும் நான்கு நடுத்தர வயது பெண்களின் வாழ்க்கைபற்றிய கதை.

அங்கு அவர்கள் வாழும் வாழ்க்கையும், சம்பவங்களையும் இந்த படத்தில் காமெடியாக சொல்லி இருக்கிறார்கள்.

அங்குள்ள சாலையில் 4 பேரும் சைக்கிளில் செல்வது போன்ற காட்சி சமீபத்தில் படமாக்கப்பட்டது. படப்பிடிப்பு முழுவதையும் ஆஸ்திரேலியாவிலேயே நடத்த திட்டமிட்டுள்ளனர். இதற்காக நாயகிகள் 4 பேருடன் படக்குழுவினர் ஆஸ்திரேலியாவில் முகாமிட்டுள்ளனர்.

இங்கு படப்பிடிப்பு முடித்த பிறகு, ஒரு சில காட்சிகள் சென்னையில் படமாக்கப்படும் என்று கூறப்படுகிறது. இந்த படத்துக்கு இன்னும் பெயர் சூட்டப்படவில்லை.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online