வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வீரர் வெய்ன் பிராவோவுடன் ஸ்ரேயா காதல்

201610140909084666_actress-shriya-saran-spotted-with-cricketer-bravo-at-a_secvpf-1தமிழ், தெலுங்கு பட உலகில் முன்னணி கதாநாயகியாக இருந்தவர் ஸ்ரேயா. இவர் 2003-ல் ‘எனக்கு 20 உனக்கு 18’ என்ற படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். ஜெயம்ரவியுடன் நடித்த ‘மழை’, தனுசுடன் நடித்த ‘திருவிளையாடல் ஆரம்பம்’ படங்கள் அவரை பிரபலபடுத்தின. இதைத்தொடர்ந்து ரஜினிகாந்துடன் சிவாஜி படத்தில் ஜோடி சேர்ந்தார். இந்த படம் 2007-ல் வெளியாகி வெற்றிகரமாக ஓடியது.

இதனால் அவருக்கு பட வாய்ப்புகள் குவிந்தன. விஜய், விக்ரம், விஷால், ஜீவா உள்ளிட்ட பலருடன் ஜோடியாக நடித்தார். ஆனால் சமீபகாலமாக புதுமுக கதாநாயகிகள் வரத்து அதிகமானதால் ஸ்ரேயாவுக்கு படங்கள் குறைந்து விட்டன. அக்கா, அண்ணி வேடங்களில் நடிக்கவே அழைப்புகள் வருகின்றன.

ஸ்ரேயாவுக்கு தற்போது 34 வயது ஆகிறது. இதனால் அவருக்கு பெற்றோர் மாப்பிள்ளை பார்ப்பதாகவும் விரைவில் திருமணம் செய்து கொள்வார் என்றும் பட உலகில் பேசப்பட்டது.

இந்த நிலையில், வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வீரர் வெய்ன் பிராவோவுடன் ஸ்ரேயாவுக்கு காதல் மலர்ந்துள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது. மும்பையில் உள்ள ஒரு பிரபல ஓட்டலுக்கு அவர்கள் ஜோடியாக வந்தார்கள். அங்கு அருகருகே உட்கார்ந்து உணவு சாப்பிட்டார்கள். நீண்ட நேரம் சிரித்து பேசிக்கொண்டு இருந்தனர். பின்னர் அங்கிருந்து வெளியேறி ஒரே காரில் புறப்பட்டு சென்றார்கள்.

அப்போது சிலர் செல்போனில் படம்பிடித்தனர். அதுபற்றி அவர்கள் கண்டுகொள்ளவில்லை. இருவரும் ஜோடியாக ஓட்டலுக்கு சென்று வந்த படங்கள் சமூக வலைத்தளங்களில் தற்போது பரவி வருகின்றன.

வெய்ன் பிராவோ ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாடியவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்திய கலாசார பண்பாடுகள் தனக்கு மிகவும் பிடித்து இருக்கிறது என்று பேட்டிகளிலும் அடிக்கடி சொல்லி வந்தார்.

ஸ்ரேயாவும், வெய்ன் பிராவோவும் திருமணம் செய்துகொள்ள முடிவெடுத்து இருப்பதாக பட உலகில் தகவல் பரவி உள்ளது.

Post your comment

மேலும் சில பரிந்துரைகள்

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries