துணிச்சலான பெண்கள் துர்கா தேவிக்கு சமமானவர்கள்: காஜல் அகர்வால்

201610121104406901_brave-women-are-equal-to-goddess-durga-devi-kajal-agarwal_secvpfநடிகை காஜல் அகர்வால் அளித்த பேட்டி வருமாறு:-

“நாடு முழுவதும் விஜயதசமி பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டு உள்ளது. பெண் தெய்வங்களுக்கு வழிபாடு நிகழ்ச்சிகள் நடந்துள்ளன. நான் ஒவ்வொரு பெண்ணையும் தேவதைகளாகவே பார்க்கிறேன். அவர்களிடம் தெய்வீக அம்சங்கள் குடிகொண்டு இருக்கின்றன.

சில பெண்கள் துணிச்சலாக இருப்பார்கள். எல்லா பிரச்சினைகளையும் தைரியமாக எதிர்கொள்வார்கள். அந்த பெண்களுக்குள் துர்கா தேவி குடி கொண்டு இருக்கிறாள் என்று உணர்ந்து கொள்ள வேண்டும். சில பெண்கள் புதுமையாக இருக்க வேண்டும் என்று விரும்புவார்கள். எதையும் புதிய கண்ணோட்டத்திலேயே அணுகுவார்கள். அந்த வகையான பெண்கள் மனதில் காளிமாதா இருக்கிறார்.

சில பெண்களிடம் அர்ப்பணிப்பு உணர்வு இருக்கும். எந்த வேலை செய்தாலும் குடும்பத்தினரின் நலன்கள் அதில் இருக்கும். பிறர் வாழ்க்கைக்காக தன்னை முழுமையாக அர்ப்பணித்து கடமையாற்றுவார்கள். அப்படிப்பட்ட பெண்கள் பார்வதி தேவிக்கு சமமானவர்கள்.

எந்த பெண் குடும்பத்துக்கு பாதுகாப்பாக இருக்கிறாளோ அந்த பெண் மனதில் அன்ன பூரணி தேவி இருக்கிறார். இந்த வகை பெண்களின் அரவணைப்பு இருந்தால் குடும்பத்துக்குள் மகிழ்ச்சி பொங்கும்.

எந்த பெண் தனக்கு உள்ளே இருக்கிற சிவனை தட்டி எழுப்புகிறாளோ அவள் தானாகவே சக்தியாக எழுந்து நிற்கிறாள். எனவே ஒவ்வொரு பெண்ணும் தனக்குள் இருக்கிற இந்த தேவதைகளை வெளியே கொண்டு வரவேண்டும். பிறகு அந்த தேவதைகளுக்கு பூஜை வழிபாடுகள் செய்ய வேண்டும். அப்படி செய்தால் வாழ்க்கை சிறக்கும்”

இவ்வாறு காஜல் அகர்வால் கூறினார்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online