தமன்னாவுக்கும் அஸ்வின் தாத்தாவுக்கும் என்ன சம்பந்தம்?

201610151235097102_tamannaah-ashwin-thatha-what-compination_secvpfசிம்பு தற்போது ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ படத்தில் பிசியாக நடித்து வருகிறார். இப்படத்தில் சிம்பு மூன்று வித்தியாசமான வேடங்களில் நடிக்கிறார்.

இதில், ‘மதுர மைக்கேல்’, ‘அஸ்வின் தாத்தா’ ஆகிய கதாபாத்திரங்களில் பெயர்களை வெளியிட்டுவிட்டார்கள். மதுர மைக்கேல் கதாபாத்திரத்தில் 90-களில் உள்ள கெட்டப்புகளில் சிம்பு வருகிறார். அஸ்வின் தாத்தா கதாபாத்திரத்தில் 60-வயது கிழவராக சிம்பு நடிப்பதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், இப்படத்தில் மூன்று கதாநாயகிகள் நடிப்பதாக ஏற்கெனவே அறிவித்திருந்தனர். இதில் ஸ்ரேயா, தமன்னா ஆகியோர் ஏற்கெனவே ஒப்பந்தம் ஆகியிருந்தனர். ஸ்ரேயா சம்பந்தப்பட்ட காட்சிகளை படக்குழுவினர் படமாக்கிவிட்ட சூழ்நிலையில், தற்போது தமன்னா சம்பந்தப்பட்ட காட்சிகளை படக்குழுவினர் படமாக்கவுள்ளனர்.

இந்நிலையில், தற்போது ‘AAA’ படப்பிடிப்பில் தமன்னா கலந்துகொண்டுள்ளார். தமன்னாவின் பகுதி அஸ்வின் தாத்தாவுடன் இணைந்து நடிப்பதாக கூறப்படுகிறது. அஸ்வின் தாத்தாவுக்கும் தமன்னாவுக்கும் என்ன சம்பந்தம்? என்பதை படம் வெளிவரும்போதுதான் தெரிய வரும். அதுவரை காத்திருக்கவும்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries