விஜய் சேதுபதி – டி.ஆர். இணைந்த படத்துக்கு தலைப்பு வெளியானது

201610191825343777_vijay-sethupathi-t-rajendar-now-kavan_secvpfவிஜய் சேதுபதி நடிப்பில் கே.வி.ஆனந்த் இயக்கத்தில் புதிய படம் உருவாகி வருகிறது. டி.ராஜேந்தர், மடோனா செபஸ்டியான் ஆகியோரும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். இதில், விஜய் சேதுபதி – டி.ராஜேந்தர் இருவரும் வில்லனாக நடித்து வருவதாக கூறப்படுகிறது.

இப்படத்திற்கு தலைப்பு வைக்காமலேயே படக்குழுவினர் படமாக்கி வந்தனர். இந்நிலையில், இன்று மாலை 6 மணிக்கு இப்படத்தின் தலைப்பை வெளியிடுவதாக படக்குழுவினர் தெரிவித்திருந்தனர். அதன்படி, இப்படத்திற்கு ‘கவண்’ என்று தலைப்பு வைத்துள்ளனர்.

e53bb6c3-b0b5-4e8c-9eb2-e97864b048fd_l_styvpf‘கவண்’ (உண்டிக்கோல்) என்பது கிராமங்களில் வயல்வெளிகளில் அமரும் பறவைகளை விரட்டுவதற்காக பயன்படுத்தும் ஆயுதம் ஆகும். இப்படத்தை ஏ.ஜி.எஸ். நிறுவனம் சார்பில் கல்பாத்தி அகோரம், அர்ச்சனா கல்பாத்தி ஆகியோர் இணைந்து தயாரிக்கின்றனர். ஏ.ஜி.எஸ்.நிறுவனம் தயாரிக்கும் 18-வது படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online